Jayam Ravi Aarti Divorce Reason : தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக விளங்கும் நடிகர் ஜெயம் ரவி, தன் மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
)
Jayam Ravi Aarti Divorce Reason : கோலிவுட் திரையுலக ஜோடிகள் பலர், சமீப சில காலமாக தொடர்ந்து விவாகரத்து பெற்று வருகின்றனர். அந்த லிஸ்டில், நடிகர் ஜெயம் ரவியும் புதிதாக சேர்ந்திருக்கிறார்.
ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரத்து:
தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக வலம் வருபவர், நடிகர் ஜெயம் ரவி. திரைப்பட தொகுப்பாளர் மோகனின் மகனான இவர், 2002ஆம் ஆண்டு திரையுலகிற்குள் அறிமுகமானார். பல ஹிட் படங்களை கொடுத்து, இன்று டாப் ஹீரோவாகவும் திகழ்கிறார். இவருக்கு, 2009ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. ஆர்த்தி, பெரிய தொழில் அதிபர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர்களுடையது, காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஜெயம் ரவிக்கும் ஆர்த்திக்கும் திருமண விவாகரத்து நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானது. ஆர்த்தி ரவி, தனது கணவருடன் இருக்கும் அனைத்து போட்டோக்களையும் நீக்கி விட்டதால் பலரும் இது குறித்து சந்தேகித்து வந்தனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, இந்த தகவலை உறுதிப்படுத்தினார் ஜெயம் ரவி. தான், தனது மனைவியை பிரிய முடிவு செய்திருப்பதாகவும் இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்ததாகவும் தெரிவித்தார்.
ஒரு பக்கம் ஜெயம் ரவி இப்படி கூற, இன்னொரு பக்கம் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியோ தன்னை கேட்காமல் தனது கணவர் விவாகரத்து குறித்து அறிவித்து விட்டதாக ஒரு அறிவிப்பினை வெளியிட்டார். ஜெயம் ரவி, சென்னை குடும்ப நல நீதிமன்றமத்தில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார். நிலைமை இப்படியிருக்க, இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட என்ன காரணம் என்று பலரும் பேசி வருகின்றனர்.
பிரபல பாடகி காரணமா?
ஜெயம் ரவி-ஆர்த்திக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைக்கு காரணம், ஒரு பிரபல பாடகி எஞ தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஜெயம் ரவி, அடிக்கடி கோவாவிற்கு செல்வாராம். அப்படி ஒருமுறை சென்ற போது, ஒரு பாடகிக்கு இவர் அறிமுகமானாராம். பெங்களூரை சேர்ந்த அந்த பாடகி, திருமணம் ஆனவர் என்றும், சில நாட்களுக்குள்ளாகவே இவர்கள் நெருங்கி பழக ஆரம்பித்ததாகவும் சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. அந்த பாடகி யார் என்ற விவரம் வெளியாகவில்லை.

அந்த பாடகியுடன் பழக ஆரம்பித்ததில் இருந்து, அவர் சொல்படிதான் ஜெயம் ரவி கேட்டு நடப்பதாகவும் அவர் சொல்லித்தான் ஆர்த்தியிடம் கூட கேட்காமல் விவாகரத்து அறிவிப்பை ஜெயம் ரவி வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
குடும்ப பிரச்சனையுமா?
ஜெயம் ரவி-ஆர்த்தி இருவரும் திருமணம் முடிந்து 2 குழந்தைகள் பிறந்த பிறகும் மனம் முழுக்க காதலுடன் இருந்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், குடும்பத்தினர் சிலரால் இவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘சைரன்’ படத்தை அவரது மாமியார் சுஜாதா தயாரித்திருந்தார்.
இதையடுத்து, இன்னொரு படத்தையும் ஜெயம் ரவியை வைத்து அவர் தயாரிக்க இருந்தாராம். அந்த படத்திற்கு ஜெயம் ரவி 25 கோடி சம்பளமாக கேட்டதாகவும் அதை அவர் தரமுடியாது என்று கூறியதால் பிரச்சனை எழுந்ததாகவும் கூறப்படுகிறது. எது எப்படியிருந்தாலும் தற்போது ஜெயம் ரவியும் ஆர்த்தியும் பிரிய இருப்பது மட்டும் உறுதியாகி இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ