விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது நயன்தாரா நடிக்கும் இமைக்கா நொடிகள் படத்திற்காக கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து கேமியோ பிலிம்ஸ் சார்பில் சி.ஜே.ஜெயகுமார் தயாரிக்கும் படம் இமைக்கா நொடிகள். டிமாண்டி காலணி படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து, இப்படத்தை இயக்குகிறார். நயன்தாரா, அதர்வா மற்றும் பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். 


தற்போது இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க விஜய்சேதுபதி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.