சென்னை: விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய செய்தி!! விஜய் சேதுபதி படத்தின் அப்டேட் ஒன்று வெளிவந்துள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 'மாமனிதன்' படத்தின் ஒரு சூப்பரான அப்டேட்டை யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் கணக்கில்  அறிவித்ததுள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்துள்ள 'மாமனிதன்' படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இந்த படம் வெளியிடப்பட காத்திருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் வெளியீடு பற்றிய செய்தி இணையத்தில் வைரல் ஆனது. 


தற்போது, இப்படத்தைப் பற்றிய அப்டேட்டை யுவன்ஷங்கர் ராஜா (Yuvan Shankar Raja) தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை காலை 11:30 மணிக்கு வெளியிடப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். 'ஏ ராசா' என்று தொடங்கும் இந்த பாடல் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது. 



பா விஜய் எழுதிய 'தட்டிபுட்டா தட்டுப்புட்டா' பாடல் சமீபத்தில் வெளியானது. இந்த பாடல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


இப்படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியைத் தவிர, 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' புகழ் காயத்ரியும் இப்படத்தில் நடித்துள்ளார்.


இதற்கிடையில், 'லாபம்', 'துக்ளக் தர்பார்', 'யாதும் ஊரே யாவரும் கேளிர்', 'கடைசி விவசாயி' மற்றும் ' மும்பைக்கர் ' ஆகிய விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் ரிலீசுக்காக தயாராக உள்ளன. மேலும், 'காத்து வாக்குலா ரெண்டு காதல்', 'விடுதலை;, 'காந்தி பாத்', '19 (ஏ)', ' மெர்ரி கிறிஸ்மஸ் ' ஆகிய படங்கள் தயாரிப்பில் உள்ளன.


ALSO READ: மாங்காய் வீசி விளையாடும் விஜய் சேதுபதி: வைரலாகும் வீடியோ


ALSO READ: Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR