Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!!

கோலிவுட்டின் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி, மாஸ்டர்ஷெஃப் தமிழ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Last Updated : May 19, 2021, 02:32 PM IST
  • மாஸ்டர்ஷெஃப் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி.
  • விஜய் சேதுபதியை புதிய அவதாரத்தில் காண ரசிகர்கள் ஆர்வம்.
  • லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
Masterchef Tamil நிகழ்ச்சியின் தொகுப்பாளராகிறார் விஜய் சேதுபதி: ரசிகர்கள் குதூகலம்!! title=

சென்னை: விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு ஒரு அட்டகாசமான செய்தி!! கோலிவுட்டின் மக்கள் செல்வனான விஜய் சேதுபதி, மாஸ்டர்ஷெஃப் தமிழ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறவுள்ளார் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ரியாலிட்டி ஷோவின் தமிழ் பதிப்பின் முதல் சீசனில் தொகுப்பாளராக கலந்துகொள்ள விஜய் சேதுபதி மிகவும் உற்சாகமாக இருக்கிறார். 

இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருக்க, அவர் மிகப்பெரிய சம்பளத்தை கோரியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை. இதற்கிடையில், சின்னத்திரையில் தங்களது அபிமான நடிகரை, புதிய அவதாரத்தில் காணப்போவது குறித்து விஜய் சேதுபதியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த மாஸ்டர்ஷெஃப் தமிழ் நிகழ்ச்சியின் ப்ரொமோவை நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். இந்த ப்ரொமோவில் விஜய் சேதுபதி உணவை ருசிப்பதையும் பாத்திரங்களை கழுவுவதையும் காண முடிகிறது. தங்களுக்கு பிடித்த நடிகர் ஒரு தொகுப்பாளராக அவதாரம் எடுத்திருப்பதை விஜய் சேதுபதியின் ரசிகர்கள் கண்டிப்பாக ரசித்து மகிழ்வார்கள். 

ALSO READ: IMDb தரவரிசை: டாப் 3 இல் இடம்பெற்ற சூரரைப் போற்று

அண்மையில் ஒரு நேர்காணலில், பணத்திற்காக தான் திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை ஒப்புக்கொள்வதில்லை என விஜய் சேதுபதி கூறியிருந்தார். மாஸ்டர்ஷெஃப் மூலம் அவரால் மக்களுடன் இன்னும் அதிகமாக புதிய வழியில் தொடர்பில் இருக்க முடியும். வெளியே வராத பல ஹீரோக்களின் புகழையும் பலர் அறியச்செய்ய முடியும். விஜய் சேதுபதி எற்கனவே 'நம்மா ஓரு ஹீரோ; என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில்,  விஜய் சேதுபதி பல திரைப்ப்படங்களில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் விக்ரம் (Vikram) படத்திலும் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

விஜய் சேதுபதி தனது அடுத்த படமான விடுதலையில், தேசிய விருது பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றுகிறார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பும் முடிந்து விட்டது. இந்த படத்தில் நயந்தாரா (Nayanthara) சமந்தா அகினேனி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள்.

ALSO READ:எனது நிலைப்பாடு சாதி, மதங்களுக்கு எதிரானது, மனிதர்கள் தான் எனக்கு முக்கியம்: விஜய் சேதுபதி

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News