கோலிவுட்டில் இந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டில் முதல் ஆறு மாதங்கள் வெளியான படங்கள் வணிகம் மற்றும் உள்ளடக்கம் சார்ந்து ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்தது. அதில், விஜய்சேதுபதியின் 'மகாராஜா' திரைப்படத்தின் பெரும் வெற்றி வணிக வட்டாரங்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திரைப்படம் வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் ரூ. 105 கோடிக்கும் அதிக வசூலை ஈட்டியுள்ளது. பெரிய பட்ஜெட்டில் பான்-இந்திய படங்கள் வந்த போதிலும் 'மகாராஜா' திரைப்படம் இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், வெளிநாடுகள் மற்றும் தமிழ் பேசாத பிரதேசங்களில் இருந்தும் இப்படம் அற்புதமான வரவேற்பை பெற்றுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தயாரிப்பாளர் சுதன் சுந்தரம் கூறும்போது, “இது வணிகரீதியாக கிடைத்த வெற்றி என்பதையும் தாண்டி, தயாரிப்பாளராக இந்தப் படம் எனக்கு ஆத்ம திருப்தியைக் கொடுத்துள்ளது. உள்ளடக்கம் சார்ந்த திரைப்படங்களை வரவேற்கவும் பாராட்டவும் திரைப்பட ஆர்வலர்கள் எப்போதும் தயாராக இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை 'மகாராஜா' கொடுத்துள்ளது. 'மகாராஜா' திரைப்படத்தை உருவாக்க முடிவு செய்தபோது, இது பார்வையாளர்களை நிச்சயம் கவரும் என்று நம்பினோம். ஆனால் எங்களை ஆச்சரியப்படுத்தியது என்னவென்றால், கமர்ஷியல் ரீதியாகவும் எங்களுக்குக் கிடைத்த அங்கீகாரம்தான். 2024 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தமிழ் சினிமா நிறைய வெற்றிகரமான திரைப்படங்களைத் தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதில், ‘மகாராஜா’ திரைப்படம் ஒரு சிறந்த இடத்தைப் பிடித்திருப்பது எங்களுக்கு பெருமை. படத்திற்கு ஆதரவு கொடுத்த பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கும் நன்றி” என்றார். 


மேலும் படிக்க | ‘கோட்’ படத்தின் பட்ஜெட் மட்டும் இத்தனை கோடியா? வாயை பிளக்க வைக்கும் தொகை..


பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் சுந்தரம், தி ரூட்டின் ஜெகதீஷ் பழனிசாமியுடன் இணைந்து தயாரித்துள்ள படம் ’மகாராஜா’. இப்படத்தை நித்திலன் சுவாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மகாராஜா படத்தில், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அவருடன் இந்த படத்தில் மமதா மோகன்தாஸ், நட்டி என்கிற நட்ராஜ், அபிராமி, திவ்ய பாரதி, பாரதிராஜா, முனிஷ்காந்த், சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி ‘இமைக்கா நொடிகள்’ படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு வில்லனாக அறிமுகமான அனுராக் காஷ்யப் இந்த படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதனிடையே மகாராஜா திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி முதல் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆக உள்ளது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ தகவல் சமீபத்தில் வெளியானது.



மேலும் படிக்க | GOAT படத்தில் இத்தனை நிமிடங்கள் விஜயகாந்த் வருகிறாரா? இதோ அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ