ஏகே 62-ல் வில்லனாக நடிக்கிறேனா? விஜய்சேதுபதியின் பதில்
ஏகே 62 திரைப்படத்தில் வில்லனாக நடிக்கிறேனா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதி பதிலளித்துள்ளார்.
தமிழில் படுபிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, பாலிவுட் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ திரைப்படம் அண்மையில் ரிலீஸாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. சமந்தா மற்றும் நயன்தாரா என இரண்டு ஹீரோயின்களுடன் இந்தப் படத்தில் அவர் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
மேலும் படிக்க | மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் கமல்ஹாசன்?
ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் நடித்திருப்பதால், மீண்டும் ஒருமுறை இப்படத்தில் இணைந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. அடுத்தடுத்து ஹிட் கொடுத்து லைம்லைட்டில் இருக்கும் நடிகை சமந்தா மற்றும் நயன்தாராவுக்கு ஏற்ற மாதிரியான கதையம்சம் இல்லை என்று சிலர் தெரிவித்துள்ளனர். சிலர் படம் ஜாலியாக இருப்பதாகவும் கூறியுள்ளனர். விமர்சனங்கள் என்னவாக இருந்தாலும், விக்னேஷ் சிவன் தன்னுடைய அடுத்தப் பட வேலைகளில் பிஸியாகியுள்ளார்.
அடுத்தப் படத்தில் நடிகர் அஜித்குமாரை அவர் இயக்க உள்ளார். இந்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. ஏகே 62 என தற்போது அழைக்கப்படும் இந்தப் படம், எந்த மாதிரியான கதையம்சமாக இருக்கும் என ரசிகர்கள் தங்களின் யூகங்களை பறக்கவிட்டு வரும் நிலையில், விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கொளுத்தி போட்டனர். ஏனென்றால், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அண்மையில் தான் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நடித்து முடித்துள்ளார்.
மேலும், தளபதி விஜய்க்கு வில்லனாக நடித்துவிட்டதால், இந்தப் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கவும் வாய்ப்பு கொடுக்கப்படும் என ரசிகர்கள் கருதினர். ஆனால், அந்த யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகர் விஜய்சேதுபதி. ஏகே 62 திரைப்படத்தில் அவர் வில்லனாக நடிக்கவில்லையாம். இது குறித்து விக்னேஷ் சிவனிடம் வெளிப்படையாக கேட்டதாகவும், அதற்கு அவர் உடனடியாக இல்லை என்று கூறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | ரூட்டை மாற்றிய ராஜமெளலி- அடுத்த படத்தோட கதை இதுதானாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR