விக்ரம் படத்தை தொடர்ந்து மீண்டும் வில்லனாகும் விஜய் சேதுபதி?
மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்கும் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் விஜய் சேதுபதி. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமாக நடித்து அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான படங்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான 'கடைசி விவசாயி' படத்தில் விஜய் சேதுபதி, ராமையா என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் தனது வித்தியாசமான நடிப்பின் மூலம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.
மேலும் படிக்க | ‘விஜய்-68’ படத்தை இயக்கும் சிறுத்தை சிவா?!- ட்ரெண்டாகும் லேட்டஸ்ட் தகவல்!
அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படம் இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. காதல் திரைப்படமான இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் நடித்திருந்தனர். இப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது கமல் நடிக்கும் 'விக்ரம்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் மூலம் இதில் விஜய் சேதுபதி ஒரு கொடூரமான வில்லனாக நடித்திருப்பது தெரிகிறது, இந்த வேடத்தில் இவரை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக காத்துகொண்டு இருக்கின்றனர். அடுத்ததாக 'மாமனிதன்' பட டிரைலர் மூலம் விஜய் சேதுபதியின் மற்றொரு முகம் காட்டப்படுகிறது, நடுத்தர குடும்பத்து மனிதன் அவனது மனைவி மற்றும் குழந்தைகளை ஒரு நல்ல நிலையில் கொண்டுவர எவ்வாறு போராடுகிறான் என்பதை காட்டும் விதமாக அமைந்துள்ளது.
தற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, திரிவிக்ரம் இயக்கத்தில் மகேஷ் பாபு மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும் 'SSMB28' படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் 'விக்ரம்' படத்தை விட இந்த படத்திற்காக அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்போவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஏற்கனவே ரஜினி, விஜய் மற்றும் கமல் ஆகியோருக்கு விஜய் சேதுபதி வில்லனாக நடித்த நிலையில் தற்போது மகேஷ் பாபுவிற்கு வில்லனாக போகிறார்.
மேலும் படிக்க | இயக்குநர் சங்கர் மகள் அதிதி சங்கரின் கிரஷ் இந்த நடிகராம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR