இயக்குநர் சங்கர் மகள் அதிதி சங்கரின் கிரஷ் இந்த நடிகராம்

இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர் தன்னுடைய கிரஷ் எந்த நடிகர் என்பதை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 1, 2022, 04:44 PM IST
  • அதிதி சங்கரின் கிரஷ் இவராம்
  • வெளிப்படையாக பேசிய அதிதி
  • யார்? என தேடும் கோலிவுட் வட்டாரம்
இயக்குநர் சங்கர் மகள் அதிதி சங்கரின் கிரஷ் இந்த நடிகராம் title=

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் எனப் பெயர் பெற்றவர் சங்கர். அவரின் மகள் அதிதி சங்கர் மருத்துவ படிப்பை முடித்த கையோடு நடிப்பில் காலடி எடுத்து வைத்துவிட்டார். இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்திருக்கும் ‘விருமன்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. படத்தில் இருந்து ஏற்கனவே வெளியிடப்பட்ட பாடல் ஒன்று, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது.

மேலும் படிக்க | ஓடிடியிலும் உலகளவில் மிரட்டிய RRR- அப்படி என்ன சாதனைனு தெரியுமா?

கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றதால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. அதிகபட்சம் ஆகஸ்ட் மாதம் வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அதிதி சங்கரிடம் உங்களுடைய கிரஷ் யார்? என கேட்கப்பட்டது. அந்த கேள்விக்கு தயங்காமல் பதில் அளித்த அவர், கேஜிஎப் நாயகன் ‘ராக்கி பாய்’ எனத் தெரிவித்துள்ளார். 

அதிதியின் இந்த பதில் இப்போது வைரலாகியுள்ளது. அண்மையில் வெளியான கேஜிஎப் 2 திரைப்படம் உலகளவில் வசூல் மழையில் நனைந்தது. ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் பாக்ஸ் ஆஃபிஸில் புதிய ரெக்கார்டை படைத்த அந்தப் படத்தில் யாஷ் நடிப்பில் மிரட்டியிருந்தார். அவருடைய நடிப்பு பலரையும் வியக்க வைத்தது. கேஜிஎப் 1 மற்றும் 2 படங்களில் சிறப்பாக நடித்ததன் மூலம் தன்னுடைய மார்க்கெட்டையும் மிகப்பெரிய உயரத்துக்கு எடுத்துச் சென்றுவிட்டார். கர்நாடகாவைக் கடந்த மற்ற மொழிகளிலும் அவருக்கு ரசிகர் பட்டாளத்தை இப்படம் உருவாக்கியுள்ளது. அதன்காரணமாக அதிதியும் ராக்கி பாய்-னால் ஈர்க்கப்பட்டுள்ளார்.  

மேலும் படிக்க | வருங்கால கணவரை இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்திய நடிகை பூர்ணா

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News