சூர்யாவை தொடர்ந்து ஓடிடி ஹீரோவாகும் விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதி, டாப்ஸி இணைந்து நடிக்கும் அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Vijay Sethupathi இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததிலிருந்து திரையரங்கில் வெளியிடத் திட்டமிட்ட படங்கள் ஓடிடிதளத்தில் வெளிவர ஆரம்பித்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை குறைய தொடங்கி உள்ள நிலையில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள படங்கள் ஓடிடி தளங்களில் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். திரையரங்குகள் திறக்கப்பட்டும் 50 சதவீதம் மட்டுமே பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதால் தயாரிப்பாளர்கள் ஓடிடி தளங்களை நோக்கி செல்வதாக தகவல்கள் வருகின்றன.
விஜய்சேதுபதி,டாப்ஸி, ராதிகா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவான அனபெல் சேதுபதி திரைப்படம் செப்டம்பர் 17ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்திற்கு முதலில் அனபெல் சுப்பிரமணியம் என்று பெயர் வைக்கப்பட்டு இருந்தது, தற்போது அனபல் சேதுபதி ஆக மாறியுள்ளது. ஹாரர் காமெடியை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
ALSO READ கடைசில என்னையும் மீம் போட வச்சிட்டீங்களே! ஆர்யாவின் கலக்கல் டிவீட்!
விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் காபே ரணசிங்கம் என்ற திரைப்படம் ஓடிடியில் வெளியானது. அதன் பின் தற்போது துக்ளக் தர்பார், கடைசி விவசாயி போன்ற படங்களும் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தற்போது அனபெல் சேதுபதி திரைப்படமும் ஓடிடியில் வெளிவர உள்ளது. தற்பொழுது விஜய் சேதுபதி, தன் கைவசம் 15க்கும் மேற்பட்ட படங்களை வைத்துள்ளார். மேலும் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான படங்கள் ஓடிடியில் வெளிவர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படத்தை தொடர்ந்து ஜெய் பீம் மற்றும் அவர் தயாரிப்பில் உருவான படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளது. தற்போது விஜய் சேதுபதி நடிக்கும் படங்களும் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி வருகிறது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYe