கடைசில என்னையும் மீம் போட வச்சிட்டீங்களே! ஆர்யாவின் கலக்கல் டிவீட்!

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் தன்னுடன் சேர்ந்து நடித்த பசுபதியின் உண்மையான ட்விட்டர் அக்கவுண்ட்டை பகிர்ந்து இந்த புதிய உலகிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார் ஆர்யா.

Written by - ZEE Bureau | Last Updated : Aug 26, 2021, 01:42 PM IST
கடைசில என்னையும் மீம் போட வச்சிட்டீங்களே! ஆர்யாவின் கலக்கல் டிவீட்!

கடந்த மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி சார்பட்டா பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமைந்தது.  இப்படத்தினை திரைதுறையில் உள்ள அனைவரும் பாராட்டினார்கள்.  குறிப்பாக கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தின் படக்குழுவினரை நேரடியாக அழைத்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

ALSO READ திரையரங்கில் வெளியாகப் போகிறதா சார்பட்டா பரம்பரை?

சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் வரும் ஒரு காட்சி சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் மெட்டீரியல் ஆக மாறி வைரலானது.  ஆர்யா நடிகர் பசுபதியை சைக்கிளில் அழைத்து செல்லும் அந்த காட்சி மீம்ஸ்காகவே வடிவமைக்கப்பட்டது போலிருந்தது. ஆர்யாவும் பசுபதியும் சைக்கிளில் செல்லும் அந்த காட்சியை படகில் செல்வது போல், கயிற்றின் மேல் செல்வது போல், பறந்து செல்வது போல், டைனோசர் மேல் செல்வது போன்று பலவகையான மீம்ஸ்கள் இணையத்தில் வைரல் ஆனது.  சார்பட்டா திரைப்படத்தின்  இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் தனது மனைவியுடன் சைக்கிளில் இருக்கும்படியான புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

 

தற்போது நடிகர் ஆர்யாவும் அதே டெம்ப்ளேட்டை பகிர்ந்து நடிகர் பசுபதியின் உண்மையான டுவிட்டர் அக்கவுண்டை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.  "வாத்தியாரே இதான் டிவிட்டர் வாத்தியாரே, பாக்ஸிங் விட இது ரத்த பூமி. உன்னோட பெயரில் இங்கு நிறைய பேர் இருக்காங்கன்னு தெரிஞ்சதும் ஒரிஜினல் நான்தானு உள்ள வந்த பாத்தியா உன் மனசு மனசு தான்! வா வாத்தியாரே இந்த உலகத்தில் உள்ள போவோம்" என்று பசுபதியின் உண்மையான ட்விட்டர் கணக்கை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ALSO READ சார்பட்டா பரம்பரை: இணையத்தை கலக்கும் கபிலன் - ரங்கன் வாத்தியார் மீம்ஸ்

சமீபத்தில் நடிகை ஆர்யாவின் பெயரை பயன்படுத்தி 70 லட்சம் வரை மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சமூக வலைதளங்களில் நடிகர் நடிகைகளின் பெயர்களில் பல போலியான கணக்குகள் உலா வருகின்றன. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News