சில படங்கள், சில நடிகர்கள், சில இயக்குனர்கள்…. இப்படி சில விஷயங்கள் எப்போதும் எல்லோராலும் எதிர்பார்க்கப்படுகின்றன, விரும்பப்படுகின்றன, நேசிக்கப்படுகின்றன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ‘சில நடிகர்களின்’ வரிசையில், தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதிக்கு நிச்சயமாக ஒரு இடம் உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. அவரது ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதத்தில் ரசிகர்களை பாதித்துள்ளது. தமிழ் திரை உலகை கலக்கிய விஜய் சேதுபதியின் புகழ் இப்போது நாடு முழுவதும் பரவும் நேரம் வந்து விட்டது.


லோகேஷ் கனகராஜின் (Lokesh Kanagaraj) மாநகரம் படத்தின் பாலிவுட் ரீமேக்கில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு 2021 ஜனவரி முதல் தொடங்கும் என்று கூறப்படுகிறது.


ALSO READ: தளபதி விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ் தேதி அறிவிப்பு! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!


புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரும் திரைப்பட தயாரிப்பாளருமான சந்தோஷ் சிவன் (Santosh Sivan) இயக்கும் இப்படத்தில் விக்ராந்த் மாஸ்ஸி சுந்தீப் கிஷனின் பாத்திரத்தில் நடிப்பார். இந்த படத்தின் பெயர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சுவாரஸ்யமாக, விஜய் சேதுபதி (Vijay Sethupathi) முதலில், அமீர்கானின் 'லால் சிங் சட்டா' படத்தின் மூலம் பாலிவுட்டில் (Bollywood) அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களுக்காக அவர் அதிலிருந்து விலகினார். இப்போது அவர் ‘மாநகரம்’ படத்தின் பாலிவுட் ரீமேக் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் மூத்த நடிகர் சஞ்சய் மிஸ்ராவும் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இப்படத்தில் ரன்வீர் ஷெராய், தான்யா மணிக்தலா, சச்சின் கெடேகர் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ஹிந்தியில் ரீமேக் செய்யப்படும் இப்படத்தின் பெயர் ஜனவரி 1 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.


ALSO READ: Rajnikanth: அபூர்வ ராகங்களாய் மலர்ந்த ’அண்ணாத்த’யின் அரசியல் மூன்றுமுகம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR