தமிழ்ப் படங்களை ட்ரோல் செய்து எடுக்கப்பட்ட ‘தமிழ்ப்படம்’ மூலம் பிரபலமானவர் இயக்குநர் சி.எஸ். அமுதன்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகர் சிவா நடித்த இப்படம் பெற்ற வெற்றியையடுத்து அதே கூட்டணியில் தமிழ்ப்படம்- 2 என்ற படமும் வெளியானது. இந்தப் படத்துக்கு முன்பாக விமலை வைத்து அவர் இயக்கிய ‘இரண்டாவது படம்’ ஷூட்டிங் கடந்த 2012ஆம் ஆண்டே நிறைவடைந்துவிட்டது.


ஆனால் சில காரணங்களால் அப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது. இந்நிலையில் அவர் விஜய் ஆண்டனியை வைத்து ரத்தம் எனும் படத்தைத் தற்போது இயக்கிவருகிறார். இதனிடையே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் கேள்வி- பதில் உரையாடலில் ஈடுபட்டார் சி.எஸ்.அமுதன்.


                                                                                


அப்போது ஒருவர், தமிழில் பிராப்பராக ரீமேக் செய்யப்பட்ட படம் எது எனக் கேட்டார். இதற்கு பதிலளித்த சி.எஸ். அமுதன் ‘மெர்சல்’ குறிப்பிட்டிருந்தார். தனது படங்களில் தமிழ் சினிமாவைக் கிண்டலடிப்பது போல ட்விட்டர் பதிவிலும் இப்படிக் கிண்டலாகப் பதில் கூறியது இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. 


மேலும் படிக்க | ‘வசூல் மன்னன்’ என மீண்டும் நிரூபித்த விஜய்! - தொடர்ந்து 5ஆவது முறையாக ‘அந்த’ சாதனை!


அவரது இந்தப் பதிவால் விஜய் ரசிகர்கள் சிலர் அப்செட்டும் ஆகியுள்ளனர். அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சலில் நடிகர் விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இப்படம் வெளியானபோது, இது கமலின் அபூர்வ சகோதர்கள் படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதுபோல இருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.


இதுமட்டுமில்லாமல் அட்லி இயக்கத்தில் ஒவ்வொரு படம் வெளிவரும்போதும் அது வேறு ஏதேனும் ஒரு படத்தைக் காப்பியடித்து எடுக்கப்பட்டதுபோல இருப்பதாகக் கூறப்படுவது வழக்கமாகவும் இருந்துவருகிறது.


மெர்சல் ரிலீஸானபோது அப்படத்தை நடிகர் கமல்ஹாசனும் கண்டுகளித்தார். விஜய் மற்றும் அட்லியுடன் அவர் இணைந்து எடுத்த புகைப்படத்தின் பின்னணியில் ‘அபூர்வ சகோதர்கள்’ படத்தின் போஸ்டர் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


                                              


மேலும் படிக்க | ‘புஷ்பா- 2’வில் என்ன ஸ்பெஷல்?! - ‘லீக்’ ஆன ‘ஃபையர்’ அப்டேட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR