நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் பிரபலமான தொடர்களுள் ஒன்றாக விளங்குவது, Never Have I Ever. இந்த தொடரில், விஜய் நடிப்பில் 2016ஆம் ஆண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக வெளியான தெறி படத்தின், “உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..” பாடல் இடம் பெற்றுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தெறி திரைப்படம்:


அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருந்த படம் தெறி. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், மொட்ட ராஜேந்திரன், ராதிகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். வில்லனின் சதியால் குடும்பத்தை இழந்த காவல்துறை அதிகாரி தன் குழந்தையுடன் வெளியூரில் வாழும் போது அவனுடைய கடந்த காலம் அவனை விடாமல் துரத்துவதுதான் கதை. இதில் வில்லனாக மகேந்திரன் நடித்திருப்பார். இந்த படத்தில், சமந்தா மற்றும் விஜய்யின் காதல் காட்சிகளின் போது “உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே..” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இந்த பாடலில், திருமணம் நடைபெறுவது, குழந்தை பிறப்பது அந்த குழந்தைக்கு முதல் பிறந்தநாள் கொண்டாடுவது போன்ற அனைத்து விஷயங்களையும் காண்பித்திருப்பர். இந்த பாடல், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ஒரு தொடரில் இடம் பெற்றுள்ளது. 


மேலும் படிக்க | Dharsha Gupta: நீச்சல் உடையில் மூச்சை நிறுத்தும் பிரபல நடிகை தர்ஷா குப்தா..!


நெவர் ஹேவ் ஐ எவர்..(Never Have I Ever)


நெட்ஃபிள்ஸ் தொடர்களுள் மிகவும் பிரபலமான சீரிஸ்களுள் ஒன்று, நெவர் ஹேவ் ஐ எவர். இந்த தொடரை, மின்டி கேலிங் என்பவர் டைரக்டு செய்திருப்பார். இவர், தமிழ்நாட்டை சேர்ந்த தந்தைக்கும் மும்பையை சேர்ந்த தாய்க்கும் மகளாக பிறந்தவர். பால்ய வயதில் இருக்கும் ஒரு பெண்ணின் கதையைத்தான் Never Have I Ever என்ற பெயரில் தொடராக எடுத்துள்ளார், மிண்டி. இந்த தொடரில், தேவி என்ற பெண்தான் கதாநாயகி. இந்த பாத்திரத்தில் மைத்ரேயி ராமகிருஷ்ணன் என்பவர் நடித்துள்ளார். இவர், இலங்கையைச் சேர்ந்த தமிழர்களுள் ஒருவர். ஆனால் குடும்பத்துடன் கனடாவில் செட்டில் ஆனவர். Never Have I Ever இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்தியாவை சேர்ந்த இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த தொடரான இது, தமிழ் பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், இதற்கென்று தமிழ்நாட்டில் ஒரு ரசிகர் படையே உள்ளது.


வெளிநாட்டு தொடரில் விஜய் படத்தின் பாடல்..


Never Have I Ever தொடரில், கதையின் நாயகி தேவி விஜய்யின் “என் ஜீவன்..” பாடலை பார்ப்பது போன்ற சீன் இடம் பெற்றுள்ளது. இந்த பாடலை ஜீ.வி பிரகாஷ் குமார் இசையில் ஹரிஹரன், சைந்தவி மற்றும் வைக்கம் விஜயலக்ஷ்மி ஆகியோர் பாடியிருந்தனர். இந்த பாடலின் உரிமம் சென்னையை சேர்ந்த பிரபல நிறுவனமான திங் மியூசிக்கிடம் உள்ளது. இதை, நெட்ஃப்ளிக்ஸில் உபயோகிப்பதற்காக நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் சென்னையில் உள்ள நிறுவனத்திடம் அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. 


கடைசி சீசன்..


இளைஞர்கள் மத்தியில் பிரபலமான தொடராக இருக்கும் Never Have I Ever, அதன் கடைசி சீசனை எட்டியுள்ளது. 3 சீசன்களை வெற்றிகரமாக இயக்கிய மிண்டி கேலிங், இதுவரை தேவி என்ற இந்திய-அமெரிக்க இளம் பெண்ணின் வாழ்க்கையில் ஏற்படும் விஷயங்களை காண்பித்திருந்தார். அந்த பெண், இப்போது பள்ளியை முடித்து கல்லூரிக்கு செல்லும் நிலைக்கு வந்ததை ஒட்டி, இத்தொடர் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரிஸில், அவ்வப்போது “எண்ணம்மா கண்ணம்மா..என்னடா கண்ணா..” போன்ற தமிழ் டைலாக்குகள் இடம் பெறும். ஆனால் இவை மிகவும் செயற்கையாக உள்ளதாக சிலர் கருத்து தெரிவித்தாலும், தொடர் என்னவோ பெரிய சக்ஸஸ்தான். இந்த தொடரின் கடைசி மற்றும் நான்காவது சீசன் கடந்த 8ஆம் தேதி (ஜூன்) வெளியானது. 


மேலும் படிக்க | Ileana: தாயாக இருக்கும் இலியானாவின் நெடுநாள் காதலர் யார் தெரியுமா..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ