ஜவான் படத்திற்கு பிறகு அட்லீ இயக்கும் அடுத்த படத்தின் அப்டேட்!

'ஜவான்' படத்திற்கு பிறகு 'தளபதி 68' படத்தை இயக்குனர் அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில், பாலிவுட் பிரபலம் ஒருவரின் படத்தை அட்லீ தயாரிப்பதாக கூறப்படுகிறது.

1 /5

தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் முன்னணி கமர்ஷியல் இயக்குனர்களில் 'ராஜா ராணி' படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இயக்குனர் அட்லீயும் ஒருவராவார்.

2 /5

பாலிவுட் பக்கம் சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் போன்ற நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

3 /5

இயக்குனர் அட்லீ தமிழில் தளபதி விஐய்யை வைத்து 'தெறி', 'மெர்சல்' மற்றும் 'பிகில்' ஆகிய மூன்று பேக் டு பேக் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார்.

4 /5

'தளபதி 68' படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்பட்டது ஆனால் 'ஜவான்' படத்தின் பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் அது நிறைவேறாமல் போய்விட்டது. இருப்பினும் 'தளபதி 69' அல்லது 'தளபதி 70' படத்தை அட்லீ இயக்குவார் என்று கூறப்படுகிறது

5 /5

ஜவான்' படத்தை தொடர்ந்து அட்லீ, முராத் கெதானியுடன் இணைந்து வருண் தவான் நடிக்கும் புதிய படத்தை தயாரிப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. இப்படத்தின் பணிகள் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு படம் 2024ம் ஆண்டு கோடையில் வெளியாகும் என்று கூறப்படுகிறது