தெலுங்கின் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் தேவரகொண்டா, பான் இந்தியா ஸ்டாராக உருவெடுத்துள்ளார். அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்றதையடுத்து பிரபல நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் அவரின் ’லைகர்’ படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இந்நிலையில், அவரும் ராஷ்மிகா மந்தனாவும் காதலிப்பதாகவும், ரகசியமாக திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் செய்திகள் தீயாக பரவின.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | வலிமை படம் எப்படி? இயக்குநர் ஹெச்.வினோத் Review


இருவரும் ஜோடியாக பொதுவெளியில் சென்ற புகைப்படங்கள் சமூகவலைதளங்கள் வேகமாக பரவியது. இது குறித்து ராஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் மவுனம் சாதித்து வந்த நிலையில், தற்போது வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் விஜய் தேவரகொண்டா. ராஷ்மிகா மந்தவுடனான காதல் குறித்து அவர் பேசும்போது, இது வழக்கம்போல் பரப்பப்படும் முட்டாள் தனமான செய்தி எனக் கூறியுள்ளார். அவர் ஒருவரியில் கொடுத்த பதிலையும் ஏற்க மறுக்கும் நெட்டிசன்கள், ராஷ்மிகாவை காதலிக்கவில்லை என அவர் கூறவில்லை. இதனால், இருவரும் காதலிக்கிறார்கள் என்பதில் மாற்றமில்லை என புதிய யூகங்களை கிளப்பிவிட்டுள்ளனர். 



ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் ஜோடியாக நடித்தனர். அதில் இருவருக்குமான கெமிஸ்டிரி மேட்சாக இருந்ததால், படம் செம ஹிட்டானது. பின்னர், டியர் காம்ரேட் படத்திலும் ஜோடி சேர்ந்தனர். இந்தப் படமும் ஹிட் அடித்தது. இந்த படங்களின் வெற்றியே, இருவரின் காதல் கிசுகிசுகளுக்கு அச்சாரமாகவும் அமைந்துள்ளது. தமிழில் சுல்தான் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த ராஷ்மிகா மந்தனா, அல்லு அர்ஜூனுடன் அண்மையில் ரிலீஸாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த ‘புஷ்பா’ படத்திலும் நடித்தார். தற்போது, அமிதாப்பச்சனுடன் குட்பை மற்றும் மிஷன் மஜ்னு ஆகிய இந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


மேலும் படிக்க | 'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இவர்களா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR