'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இவர்களா?

சிம்பு நடிப்பில் தமிழில் வெளியான 'மாநாடு' படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகா சைதன்யா நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 23, 2022, 09:09 AM IST
  • சிம்புவிற்கு கேம் சேஞ்சர் ஆகா மாறிய மாநாடு.
  • தமிழகத்தில் 100 கோடி வசூல்.
  • தெலுங்கில் ரீமேக் ஆகும் மாநாடு.
'மாநாடு' தெலுங்கு ரீமேக்கில் இவர்களா? title=

சிம்புவிற்கு வரிசையாக பல படங்கள் தோல்வியடைந்த நிலையில் சிறந்த கம்பேக் கொடுக்கும் விதமாக அமைந்த படம் மாநாடு.  வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்த டைம் லூப் த்ரில்லர் படம் பல ரசிகர்களின் மனதை வென்றது.  சிம்புவின் திரைப்பயணத்தில் இதுவரை கிடைத்திடாத பாராட்டை இப்படம் பெற்றது.  இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன், டேனி போன்ற பலர் நடித்திருந்தனர்.  

மேலும் படிக்க | சமந்தாவின் சாகுந்தலம், அழகான மற்றும் அட்டகாசமான் போஸ்டர்

பல போராட்டங்களை தாண்டி கடந்த ஆண்டு  நவம்பர் மாதம் இப்படம் வெளியாகி வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.  இவ்வாறு வெற்றிபெற்ற இந்த திரைப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  தெலுங்கிலும் இந்த படத்தை வெங்கட் பிரபு தான் இயக்கப்போவதாக கூறப்படுகிறது.  தமிழில் இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்த நிலையில், தெலுங்கில் இந்த படத்தை சுரேஷ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு தயாரிக்க இருக்கிறார்.

மேலும் இப்படம் குறித்த முக்கியமான தகவல் என்னவென்றால் இதில் நாக சைதன்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பல தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.  தற்போது அந்த வரிசையில் 'மாநாடு' படமும் சேரப்போகிறது.  

naga

நாக சைதன்யா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'பங்கர்ராஜூ' படத்தின் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கிறார்.  அதனைத்தொடர்ந்து இவர் விக்ரம் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நன்றி' படத்தின் படப்பிடிப்பை சமீபத்தில் முடித்து இருக்கிறார்.  மேலும் இவர் விக்ரம் குமார் இயக்கத்தில் OTT-ல் வெளியாகப்போகும் 'தூதா' என்ற வெப் தொடரில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.  அடுத்ததாக நாக சைதன்யா வெங்கிஅட்லூரி இயக்கப்போகும் டைம் டிராவல் குறித்த கதையம்சத்தில் நடிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் நடிகை பூஜா ஹெக்டே நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தில் நடித்திருக்கிறார், பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார்.  அதனையடுத்து கொரட்டாலா சிவா இயக்கத்தில் ராம் சரண் தேஜ் ஜோடியாக நடித்துள்ள 'ஆச்சார்யா' படத்தின் வெளியீட்டிற்காக பூஜா ஹெக்டே காத்திருக்கிறார்.

மேலும் படிக்க | புதிய ப்ரமோக்களால் தெறிக்கவிடும் வலிமை!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News