சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு செல்லும் பிரபலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கிறது. விஜய் டிவி மற்றும் சன் டிவி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிக்கும் நடிகர் நடிகைகள் வெகு சீக்கிரமாக மக்களிடம் பிரபலமடைந்துவிடுவதால், அந்த புகழ் வெளிச்சத்தை வைத்து சினிமா வாய்ப்பும் தேடி வந்துவிடுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிவகார்த்திகேயனா இது? வெளியானது மாவீரன் படத்தின் அறிவிப்பு!


விஜய் டிவியில் இருந்து வெள்ளித்திரைக்கு பலர் சென்றிருந்தாலும், சிவகார்த்திகேயனின் என்டிரிக்குப் பிறகு வெள்ளித்திரைக்கு செல்வோரின் எண்ணிக்கையும், அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது. காமெடி முதல் கேரக்டர் ரோல் வரை அனைத்து கதாப்பாத்திரங்களுக்கும் சின்னத்திரையில் கோலோச்சுபவர்களை வெள்ளித்திரைப் பயன்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறது. சூப்பர் சிங்கர் மூலம் போட்டியாளராக வந்து, குக் வித் கோமாளி மூலம் பிரபலமாக மாறியிருக்கும் சிவாங்கி அண்மையில் டான் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். அந்தப் படத்தில் அவர் நடித்ததற்கு பிறகு இன்னும் பட வாய்ப்புகள் அதிகம் வரத் தொடங்கியுள்ளன. முன்னணி நடிகர்களின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கவும் அழைக்கப்பட்டு வருகிறார்.



இந்தளவுக்கான ரீச் இருப்பதை உணர்ந்து மற்ற சின்னத்திரை பிரபலங்களும் தங்களின் வெள்ளித்திரை என்ட்ரியை கவனமாக எடுத்து வைத்து வருகின்றனர். அந்தவகையில் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு இரண்டு விஜய் டிவி பிரபலங்கள் சென்றிருக்கின்றனர். கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு முத்திரை பதித்த கேப்ரியல்லா, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரி தொடர் மூலம் சின்னத்திரை பிரபலமானார். அவரும், விஜய் டிவியில் மெஹா ஹிட் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மாவில் பாரதியாக நடிக்கும் வினுஷாவும் தான் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்துள்ளனர்.    


மேலும் படிக்க | நடிகர் விஜய் மீதான வழக்கை முடித்து வைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!


இருவரும் இணைந்து என்4 படத்தில் நடித்திருக்கிறார்கள். யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தின் போஸ்டரை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் வினுஷா. இருவரின் வெள்ளித்திரை பயணமும் வெற்றியடைய ரசிகர்களும் வாழ்த்து தெரவித்துள்ளனர். அதேநேரத்தில் வினுஷா மற்றும் கேப்பிரியல்லா இருவரும் தங்களின் சீரியல்களில் தொடர்ந்து நடிப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ