தாய் மகனுக்கு இடையேயான பாசப்போராட்டத்தை கதைக்களமாக கொண்டு உருவாகியிருக்கும் திரைப்படம் ’தேள்’. பிரபு தேவா மகனாகவும், ஈஸ்வரி ராவ் அம்மாவாகவும் நடித்துள்ளனர். பிரபு தேவாவுக்கு ஜோடியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். காமெடி, கலாட்டா நிறைந்த குடும்ப திரைப்படமாக உருவாகியிருக்கும் தேள் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ALSO READ | நீங்கள் எப்போதும் சாம்பியன் தான், சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்


கொரோனா காரணமாக ஆர்.ஆர்.ஆர், வலிமை உள்ளிட்ட மிகப்பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகாத நிலையில், பொங்கல் ரிலீஸாக ‘தேள்’ திரைப்படம் திரைக்கு வர உள்ளது. ஏற்கனவே பொங்கல் ரிலீஸாக ’கொம்பு வச்ச சிங்கமடா’, ’கார்பன்’, ‘என்ன சொல்ல போகிறாய்’ உள்ளிட்ட திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளன. அந்த வரிசையில் தேள் திரைப்படமும் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், தேள் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை பற்றிய அப்பேட் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் படத்தினை தமிழகத்தின் முன்னணி பொழுதுபோக்கு சேனலாக இருக்கும் விஜய் டீவி கைப்பற்றியுள்ளது.



ALSO READ | கர்ப்பமாக இருப்பதை உறுதிசெய்த காஜல் அகர்வால்!


பிரபுதேவாவுக்கு 2022 ஆம் ஆண்டு தொடக்கமே ஜோராக ஆரம்பித்துள்ளது. அவர் நடித்து முடித்திருக்கும் ’பஹீரா, மை டியர் பூதம், பொய்க்கால் குதிரை’ ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸூக்கு தயாராக உள்ளன. தேள் திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஹரிக்குமார் இயக்கியுள்ளார்.


 


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR