’குக் வித் கோமாளி’ ஸ்டாரை தூக்கும் பிக்பாஸ் டீம்! புகழ் சேருமா?
குக் வித் கோமாளி புகழ் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
விஜய் டிவியில் விரைவில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது. இதற்கான போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணியில் பிக்பாஸ் டீம் இறங்கியிருக்கிறது. கடந்த சீசன்களைப் போலவே காரசாரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தேடித் தேடி ஆட்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றனர். கிராமிய பாடல், வெஸ்டர்ன் மற்றும் மாடலிங் என ஒவ்வொரு துறையிலும் ஸ்டாராக இருப்பவர்களை குறி வைத்திருக்கிறது பிக்பாஸ் டீம்.
மேலும் படிக்க | ’அலப்பறை ஆரம்பம்’ பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் பிரியங்கா
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் பயணித்து வரும் ராஜலட்சுமி மற்றும் அவரது கணவர் செந்தில் கணேஷ் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியானது. இருவர் அல்லது இருவரில் யாரேனும் ஒருவர் கலந்து கொள்ளலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது. அடுத்ததாக தொகுப்பாளர் பிரிவில் விஜே ரக்ஷன் செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அர்ச்சனா மற்றும் பிரியங்கா, ரியோ ஆகியோர் பிக்பாஸூக்கு சென்று வந்தனர். அவர்களைத் தொடர்ந்து இந்த சீசனில் ரக்ஷனை வீட்டிற்கு உள்ளே அனுப்ப கோதாவில் குதித்திருக்கிறது பிக்பாஸ் டீம். கடந்த முறையே அவருக்கு வாய்ப்பு சென்றபோதும், சில காரணங்களால் பங்கேற்கவில்லையாம்.
அவருக்கு அடுத்ததாக குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சத்துக்கு சென்ற புகழை அணுகியிருக்கிறது பிக்பாஸ் டீம். அவர் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என ஷெட்யூல் போட்டு பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். அவரை பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் அனுப்ப முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், அவருக்கு இருக்கும் வாய்ப்புகள் காரணமாக 100 நாட்கள் நிகழ்ச்சயில் பங்கேற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுதவிர குக் வித் கோமாளியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்களையும் களமிறக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறதாம்.
இப்போதைக்கு அக்டோபர் 2 ஆம் தேதி பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொடங்க முடிவெடித்துள்ள விஜய் டிவி, அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகலாம்.
மேலும் படிக்க | பிக்பாஸ் வீட்டுக்கு வருகிறாரா சன்னிலியோன்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ