உறியடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் விஜயகுமார். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான மற்றும் முக்கியமான கதைக்களத்தை கொண்டு உறியடி படத்தை எடுத்து அனைவரது மத்தியிலும் இடம் பிடித்தார். அதன் பிறகு வெளியான உறியடி 2 மற்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான ஃபைட் கிளப் ஆகிய படங்கள் விஜயகுமாருக்கு மேலும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.  தற்போது அவரது நடிப்பில் உருவாகியுள்ள எலக்சன் படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Sivakarthikeyan New Movie : சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கும் விஜய் பட நடிகை! யார் தெரியுமா?


ரீல் குட் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஜயகுமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோசி, ஜார்ஜ் மரியான், பவெல் நவகீதன், திலீபன், ராஜீவ் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  தமிழ் இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. மேலும் மகேந்திரன் ஜெயராஜூ ஒளிப்பதிவு செய்ய, சி ஸ் பிரேம் குமார் எடிட்டிங் செய்துள்ளார். கோவிந்த் வசந்தா இந்த படத்திற்கு பாடல்கள் மற்றும் பின்னணி இசை அமைத்துள்ளார். அழகிய பெரியவன், விஜயகுமார் மற்றும் இயக்குனர் தமிழ் 3 பேர் இணைந்து எலக்சன் படத்திற்கு வசனங்கள் எழுதியுள்ளனர். 


இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிலேயே இது முழுக்க முழுக்க அரசியல் படம் என்று படக்குழு தெளிவுபடுத்தியிருந்தது.  அதன்படி உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. சட்டமன்றத் தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல்களை விட உள்ளாட்சித் தேர்தல் எவ்வளவு முக்கியமானது என்றும், அதில் எவ்வளவு சண்டை சச்சரவுகள் மற்றும் கலவரங்கள் உருவாகும் என்பதை இந்த படத்தில் சிறப்பாக கூறியுள்ளனர்.  விஜயகுமாரின் தந்தை ஜார்ஜ் மரியான் நீண்ட ஆண்டுகளாக கட்சியின் விசுவாசியாக இருந்தும் அவருக்கு எந்தவித பொறுப்பும் கட்சி கொடுக்கவில்லை.  ஒரு கட்டத்தில் தனது அப்பாவை அவமானப்படுத்தியதற்காக ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் விஜயகுமார் நிற்கிறார்.  ஆனால் ஐந்து ஓட்டு வித்தியாசத்தில் அந்த தேர்தலில் தோல்வியடைகிறார். 



இதனால் அவரது குடும்பம் நிதி ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறது. அதன் பிறகு ஒவ்வொரு பிரச்சனையாக அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. இறுதியில் மீண்டும் தேர்தலில் நின்றாரா? அதில் வெற்றி பெற்றாரா? என்பதே எலக்சன் படத்தின் கதை.  விஜயகுமார் நடராசன் என்ற கதாபாத்திரத்தில் ஒரு கிராமத்து இளைஞனாகவே வாழ்ந்துள்ளார்.  கிராமத்து வாழ்வியலை தனது நடிப்பின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.  விஜயகுமார் மனைவியாக வரும் ப்ரீத்தி ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  விஜயகுமாரின் அப்பாவாக வரும் ஜார்ஜ் மரியான் நல்லசிவம் என்ற அரசியல்வாதி கதாபாத்திரத்தில் அப்படியே ஒத்துப் போகிறார். 


தனது சொந்த நண்பனா? கட்சியா? என்று வரும் போது கட்சிக்கு விசுவாசியாக இருக்கிறார். இதனாலேயே இவருக்கு பல இடங்களில் பிரச்சனைகள் வருகிறது.  குறிப்பாக துண்டை வைத்து வரும் காட்சி சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. இயக்குனர் தமிழ் தேர்தலில் நடக்கும் பிரச்சனைகளை வைத்து முழு கதையை எழுதியுள்ளார். அது சில இடங்களில் ஒர்க் ஆக இருந்தாலும் பல இடங்களில் திரைக்கதையுடன் ஒத்துப் போகவில்லை.  இதுவே இந்த படத்திற்கு பெரிய பிரச்சினையாக அமைகிறது.  கோவிந்த் வசந்தாவின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இரண்டுமே நன்றாக இருந்தது.  முழுக்க முழுக்க அரசியலை மையமாக கொண்டிருந்த கதையில் இன்னும் சற்று அரசியல் சேர்த்து இருந்திருக்கலாம். 


மேலும் படிக்க | எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ள கல்கி 2898 கிபி படம்! வெளியான மாஸ் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ