தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு கிடைத்த புதிய அங்கீகாராம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று அனிருத் இசையில் விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அனிருத் இசையில் வெளியாகி இருக்கும் இப்பாடல் சமூக வலைதளமான டிக் டாக்கில் மிகப்பெரிய அளவில் ரீச் கிடைத்துள்ளது.


 



 


இந்த பாடலை இதுவரை 200 மில்லியன் மக்கள் டிக் டாக்கில் நடித்துள்ளனராம். இதை அனிருத் ரவிச்சந்தர் வெளியிட்டுள்ளார். இதை புதிய வீடியோ ஒன்றின் மூலமாகத் தெரிவித்துள்ளார் அனிருத்.


மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனது குறிப்பிடத்தக்கது.