லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் நடிகர் சாந்தனு, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த பிப்ரவரி 14-ம் தேதியன்று அனிருத் இசையில் விஜய் சொந்தக் குரலில் பாடிய குட்டி ஸ்டோரி பாடலை வெளியிட்டது. இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனிடையே சமீபத்தில் மாஸ்டர் திரைப்படத்தின் கலை இயக்குநர் சதீஷ் குமாரின் பிறந்தநாளை படப்பிடிப்பு தளத்திலேயே கேக் வெட்டி கொண்டாடியது படக்குழு. 


சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளது என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.