மிக அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள மாஸ்டர் படத்தின் ரிலீசுக்கான காத்திருப்பு முடிந்துவிட்டது என்றே கூறலாம். நாளை, ஜனவரி 13 அன்று மாஸ்டர் படம் திரை அரங்குகளில் வெளிவரவுள்ளது. சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு விஜய் ரசிகர்கள் தங்கள் நாயகனை திரையில் காணவுள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

XB பிலிம் கிரியேட்டர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் ஆகியவற்றால் கூட்டாக தயாரிக்கப்பட்டுள்ள மாஸ்டர் (Master) இப்படம், விஜய் ரசிகர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் என நம்பப்படுகின்றது. ரசிகர்களைக் கவரும் வகையில், படக்குழுவினர் தொடர்ந்து சில நாட்களாக பல ப்ரோமோக்களை வெளியிட்டு வருகின்றனர்.


இந்த ப்ரோமோக்கள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளன என தாராளமாக சொல்லலாம். இன்று வெளியிடப்பட்டுள்ள கடைசி ப்ரோமோவில் விஜய் மற்றும் அர்ஜுன் தாஸ் இடையே நடக்கும் அதிரடி ஆக்ஷனை வெளிக்காட்டும் கபடிப் போட்டியின் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.



இதில் ரசிகர்களுக்கு மற்றொரு குதூகலமும் காத்திருந்தது!! ஆம்!! இதில் வரும் காட்சியின் பின்னணியில் கில்லி படத்தின் பின்னணி இசை (BGM) ஒலிக்கப்பட்டது!!


விஜய் (Vijay) ரசிகர்களின் மிகப் பெரிய பொங்கல் பரிசாக மாஸ்டர் படம் வரவுள்ளது என்பதில் சந்தெகமில்லை. லோகேஷ் கனகராஜின் அதிரடி இயக்கத்தில் தளபதி விஜயின் அட்டகாச நடிப்பில் மாஸ்டர் படு மாசாக உருவாகியுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இந்த படத்தில் விஜயுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் (Vijay Sethupathi) இணைந்திருப்பது படத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.


லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj) இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகன், ஆண்ட்ரியா ஜெரேமியா, பிரேம், சஞ்சீவ், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி ஜி கிஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


ALSO READ: விஜய் இன் மாஸ்டர் படத்தின் காட்சிகள் லீக்! படக்குழுவினர் அதிர்ச்சி


ALSO READ: மாஸ் காட்டும் விஜயின் மாஸ்டர் Promo: #MasterPromo3-யில் கலக்கும் வாத்தி விஜய்!!