ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!
![ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி! ரோலக்ஸ் சூர்யா பற்றி முதன் முதலாக மனம் திறந்து பேசிய விஜய் சேதுபதி!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2022/07/09/236498-suriya.jpg?itok=nbKoN78S)
விஜய் சேதுபதி சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் விக்ரம் படம் பற்றியும், சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்தும் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்த ஒரு படமென்றால் அது விக்ரம் படம் தான். விமர்சன ரீதியாகவும், வணிக ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வரும் இந்த படம் வெற்றிகரமாக தொடர்ந்து ஆறாவது வாரமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றிநடைபோட்டு ஓடிக்கொண்டிருக்கின்றது. திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் இந்த படம் தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த ஆக்ஷன் திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் மனதில் பதியும் அளவிற்கு இருந்தது. இப்படத்தில் கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி ஆகியோரது மிரட்டலான நடிப்பு நல்ல வரவேற்பை பெற்றது.
மேலும் படிக்க | இரவின் நிழல் படம் வெளியாகுமா? வந்தது புதிய சிக்கல்!
படத்தின் இறுதியில் சில நிமிடங்களே சூர்யா தோன்றினாலும் பலரின் இதயங்களையும் கவர்ந்துள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதி சந்தானம் என்கிற கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார், இவர் மிரட்டலான வில்லனாக இருந்தாலும் அவரது தலைவனான ரோலக்ஸை நினைத்து அடிக்கடி பயந்து பேசுவார். சந்தானம் போன்ற வில்லன் இன்னொருவரை கண்டு அஞ்சுவதால் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியில் சூர்யா தோன்றியதும் பலரும் ஆர்வமாக பார்த்தனர். சமீபத்தில் நடைபெற்ற 'மாமனிதன்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி, சூர்யாவின் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசுகையில், ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு இயக்குனர் லோகேஷ் பல நடிகர்களை தேடிக்கொண்டிருந்தார், படம் வெளியாகும் சில வாரங்களுக்கு முன்னர் தான் இந்த கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்கப்போவது உறுதியானது. இவ்வளவு பெரிய மாஸ் ஹீரோ இந்த ரோலில் நடிக்கப்போவது அனைவருக்கும் ஆச்சர்யமானதாக இருந்தது. ஆனால் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு மகிழ்ச்சியாக இருந்தது. இதுபோன்று பெரிய ஹீரோக்கள் மாறுபட்ட கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது திரைத்துறையில் ஏற்பட்டிருக்கும் பெரிய மாற்றம் என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் மைக்கல், மெரி கிறிஸ்துமஸ், விடுதலை, மும்பைக்கார் போன்ற படங்கள் வரவுள்ளன. அதனைத்தொடர்ந்து ஷாருக்கான் நடிக்கும் 'ஜவான்' படத்திலும், 'புஷ்பா-2' படத்திலும் விஜய் சேதுபதியை நடிக்கவைக்க பேச்சுவார்த்தை நடந்துவருவதாக கூறப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR