பார்த்திபன் எழுதி, நடித்து, இயக்கியுள்ள இரவின் நிழல் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது மகள் பதிலளிக்க சென்னை வணிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விருது பெறும் நோக்குடன் 'இரவின் நிழல்' என்ற படத்தை தனது அகிரா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பதாக கூறி, நவீன் எண்டர்பிரைசஸ் பாஸ்கரராவிடம் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நடிகர் பார்த்திபன் வாங்கியுள்ளார்.
அதற்கான வாடகை பாக்கி 25 லட்சத்து 13 ஆயிரத்து 238 ரூபாயை செட்டில் செய்யாததால் ஜூலை 15ஆம் தேதி படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரி பாஸ்கர் ராவ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி, வழக்கு குறித்து நடிகர் பார்த்திபன், அவரது நிறுவனம், அதன் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12க்கு தள்ளிவைத்துள்ளார்.
இரவின் நிழல் படம் கடந்த மாதமே வெளியாக வேண்டிய நிலையில் சில காரணங்களால் தள்ளி போனது. இந்நிலையில் தற்போது படத்தின் மீது வழக்கு பதியப்பட்டு நீதிமன்றத்தில் உள்ளது. முதல் சிங்கிள் ஷாட் பிலிம் என்ற பெருமையை பெற்ற இரவின் நிழல் படம் வெளியாவதற்கு முன்பே பல விருதுகளை பெற்றுள்ளது. ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருந்த நிலையில் தற்போது படம் வெளியாகுமா என்ற சூழல் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ரசிகர்கள் எதிர்பார்த்த வாடிவாசல் படத்தின் அப்டேட் இதோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR