சீனுராமசாமி மற்றும் விஜய்சேதுபதி கூட்டணியில் ஏற்கனவே உருவான ‘தர்மதுரை’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெற்றிப்பெற்ற நிலையில், இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்தை இசைஞானி இளையராஜா மற்றும் யுவன்சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். காயத்திரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | டிசம்பர்-10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் 6 புதிய படங்கள்!


படப்பிடிப்புகள் முடிந்து நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இத்திரைப்படத்தின் இரு பாடல்கள் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, ’மாமனிதன்’ யூ டியூப்பில் வெளியாகியுள்ளது. கிராமப் பின்னணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் விஜய்சேதுபதி, ஆட்டோ டிரைவாக வருகிறார்.


ALSO READ | அதிகம் எதிர்பார்க்கபட்ட 'வலிமை' படத்தின் இரண்டாம் சிங்கிள் வெளியீடு !


இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்தவர்களுடன் பழகும் அவர், கும்பமேளாவிலும் கலந்து கொள்கிறார். மதங்களைக் கடந்து அனைவரிடமும் பழகும் நபராகவும் அவர் காட்டப்படுகிறார். இதனால், விஜய் சேதுபதி ஏதேனும் பிரச்சனைகளை சந்திக்கிறாரா? என்பதே படத்தின் கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதத்தை வைத்து நடக்கும் அரசியலை எளிய மக்களின் பார்வையில் இருக்கும் விளக்கும் படமாகவும் இருக்கும் என்றும், டீசரில் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் மூலம் யூகித்துக்கொள்ள முடிகிறது. விறுவிறுப்பான மற்றும் நிகழ்கால அரசியல் சூழலையும் மையப்படுத்தி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாமனிதன் டீசர், வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படவில்லை. அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR