விழுந்தான் இடியாய்…எழுந்தான் மலையாய்… ஆரம்பிக்கலாமா..! ஒரு வருடத்தை நிறைவு செய்த விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் மற்றும் விஜய்சேதுபதி, பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த விக்ரம் திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறுது
தற்போது நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் ஃபாசில் ஆகியோர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம் ‘விக்ரம்’. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிருந்தார். கடந்த ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி விக்ரம் வெளியாகி தமிழ்நாடு அளவில் மட்டுமின்றி உலக அளவில் மிக பெரியா விற்றிய தொட்டது .அனைத்து இடங்களிலும் தரமான வசூலை ஈட்டியது. ரூ.150 கோடி வசூலை முதல் மூன்று நாட்களில் வசூலித்தாக தெரிவித்துள்ளனர் சினிமா வணிகம் சார்ந்த வல்லுநர்கள்.
வசூல் ரீதியாகமட்டுமின்றி ரசிகர்கள் மத்தியிலும் பாசிட்டிவான வரவேற்பை பெற்றுள்ளது 'விக்ரம்'. கதை, இசை, காட்சி அமைப்பு, சண்டைக் காட்சிகள், எடிட்டிங் என அனைத்தும் அற்புதமாக அமைந்துள்ளது. நடிகர் சூர்யா கவுரவத் தோற்றத்தில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவின் 'மல்டிவெர்ஸ்' திரைப்படம் என இதனை சொல்லலாம். 'கைதி' படத்தின் கதைக்கும், இதற்கும் தொடர்பு உள்ளது. அதில் வரும் கதாபாத்திரங்கள் சில இதிலும் வருகின்றன. எனவே தமிழ் சினிமாவின் முதல் மல்டி யூனிவெர்ஸ் படங்கள். லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் இங்கு தனி ஒரு கூட்டம் உள்ளது.
முதல் பாதியில் கமலுக்கான காட்சிகள் அதிகம் இல்லையென்றாலும் கூட அவரது நிழலைப் பல காட்சிகளில் உணர முடிகிறது. எத்தனையோ வேடங்களுக்காக அத்தனை அரிதாரம் பூசியிருந்தாலும், இந்த நடிப்பு சிங்கத்தின் சீற்றம் சிறிதளவும் குறையவில்லை. பேரன் மீதான பாசத்தில் கண்கள் பனித்து, மரண வீட்டில் மௌன பாசப்போராட்டம் நடத்தி, விக்ரமாக விஸ்வரூபம் எடுக்கும் காட்சியில் புருவம் உயர்த்தி அசுர வதம் புரிந்து, நடிப்பில் தான் என்றும் பதினாறு என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார் கமல் !
தமிழ் சினிமா காலங்காலமாகக் கட்டமைத்த பெண்கள் பற்றிய பொது புத்திகள் இன்றைய புது அலை இயக்குநர்களால் ஒவ்வொன்றாகத் தகர்க்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்த வகையில், பெண் ரகசிய போலீஸ் பொதுப்புத்தியைத் தவிடுபொடியாக்கும் பாத்திரம் ஏஜென்ட் டீனா.
டீனா அடையாளத்தை வெளிப்படுத்திய தருணத்திலிருந்து மின்னலாய் சுழன்று சண்டையிட்டு, குழந்தையைக் காப்பாற்றி கண் மூடும் காட்சி திரையரங்கில் வேற லெவல்.
படம் வெளியாகி ஒரு வருடம் ஆனா பின் கூட இப்படத்தின் மீது வைப் குறையாமல் உள்ளது. இன்று கூட பலரின் செல்போனில் இப்படத்தின் பாடல்தான் ரிங்க்டோனகா ஒழித்துகொன்னுடுள்ளது. வெளிவந்த நாள் முதல் இன்று வரை விக்ரம் 2 எப்போது என எதிர்பார்ப்பு கூடிகொண்டுள்ளது. தற்போதும் தளபதி விஜய் லியோ படமும் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் வருவதால், லியோ மற்றும் விக்ரம் ஆகிய இரண்டு படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.
விக்ரம்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, கமல் மீண்டும் திரையுலகில் குறிப்பிடத்தக்க இயக்குநர்களுடன் கைகோத்து நடிக்க உள்ளது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
கட்டுரையாளர்: ஸ்டாலின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ