புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'விக்ரம் வேதா' படம் வரும் வெள்ளிக்கிழமை அன்று திரையில் வெளிவர உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓரம்போ, வா’ படங்களுக்கு பிறகு இயக்குனர் புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியுள்ள படம் ‘விக்ரம் வேதா’. 


சாம்.சி.எஸ். இசையமைத்துள்ள இதற்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். ‘Y NOT ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.சஷிகாந்த் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். 


இந்த படத்தில் மாதவன் விஜய் சேதுபதி, ஸ்ரதா ஸ்ரீநாத், வரலட்சுமி நடித்து உள்ளனர். இப்படம் வருகிற வெள்ளிக்கிழமையன்று 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தமிழகத்தில் 450, கேரளாவில் 125, கா்நாடகாவில் 110 என உலகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


இந்நிலையில் 21-ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளது. இரண்டு மாஸ் ஹீரோக்கள் சேர்ந்தது நடிக்கும் இந்த படத்திற்கு அதிக அளவு எதிர்ப்பார்ப்புகள் இருக்கிறது.