Bigg Boss Tamil Season 5: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் நேற்று முன்தினம் மிகவும் பிரம்மாண்டமாக தொடங்கியது. மொத்தம் 18 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

18 போட்டியாளர்களின் விவரம்:
ஆடை வடிவமைப்பாளர் மதுமிதா, பாடகி இசைவாணி, யூடியூப் விமரிசகர் அபிஷேக் ராஜா, சின்னத்திரை நடிகர் ராஜூ ஜெயமோகன், தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, நடிகர் அபிநய், நாட்டுப்புற பாடகி சின்னப்பொண்ணு, சீரியல் நடிகை பவானி ரெட்டி, மாடல் அழகி நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, நடிகர் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் உள்ளிட்டோர் பிக்பாஸ் (Bigg Boss Tamil) போட்டியாளர்களாக கலந்துதகொண்டுள்ளனர்.


ALSO READ | Big Boss 5: பிக்பாஸ் போட்டியாளர்கள் அறிமுகம் சுடச்சுட…


இதற்கிடையில் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் இந்த வாரத்திற்கான பாத்ரூம் க்ளீனிங், சமையல், ஹவுஸ் கீப்பிங், பாத்திரம் கழுவுவது போன்ற டீம்கள் பிரிக்கப்பட்டது. அத்துடன் இன்றைய முதல் ப்ரோமோவில் ஹவுஸ்மேஸுக்கு பிக்பாஸ் புதிய டாஸ்க் கொடுத்துள்ளார். அங்கு பேசுவதற்கு அமைக்கப்பட்ட பிரத்யேக அறையில் நின்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார் போட்டியாளர்கள். 


இந்நிலையில் தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில்., தனது கடினமான பயணத்தை பற்றி பேசிய பாடகி சின்ன பொண்ணுக்கு மற்ற போட்டியாளர்கள் அனைவரும் லைக் ஹார்ட் என அள்ளிக்கொடுக்க நடிகர் ராஜீவ் ஜெயமோகன் மட்டும் டிஸ்லைக் கொடுத்துள்ளார். அதற்கான காரணத்தையும் சொல்கிறார். 


ALSO READ | Bigg Boss 5: மகிழ்வித்து மகிழ்! 100 நாட்கள் தொடரும் பிக் பாஸ் சீசன் தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR