நடிகை ஜோதிகா இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறிவிட்டார் என சில தகவல்கள் வெளியாகியுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 
இதற்கு சாட்சியாக ஒரு வீடியோவில் சூர்யா இஸ்லாமிய முறைப்படி தர்காவில் தொழுவது போன்ற வீடியோவும் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. மசூதியில் சூர்யா, தலையில் இஸ்லாமியர்களைப் போல குல்லா அணிந்து கழுத்து நிறைய மாலைகளுடன் காட்சி தரும் புகைப்படங்களும், வீடியோவும் இணையத்திலும், யூ டியூபிலும் வைரலாகிக் கொண்டிருக்கிறது. ஆனால், சூர்யா இதை மறுத்துள்ளார். தான் மதம் மாறி விட்டதாக இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாக சூர்யா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது


மேலும், சிங்கம் 3 படப்பிடிப்பின் போது ஆந்திராவில் கடப்பா பகுதிக்கு சென்ற போது  ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்ததால் அவருடன் அந்த தொழுகையில் கலந்துகொண்டாதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. 


எனவே இது வெறும் வதந்தியே எனத் தெரிகிறது.