அட்லீ மனைவியுடன் கீரத்தி சுரேஷ் மாஸ் டான்ஸ்: நடிகை நயன்தாரா நடனமாடிய ஜவான் படத்தின் ஹயோடா பாட்டின் இந்தி வெர்ஷனான சலேயா பாடலுக்கு பிரியா அட்லீயுடன் கீர்த்தி சுரேஷ் நடனமாடிய வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜவான் திரைப்படம்:
கோலிவுட்டில் சில படங்களையே இயக்கியிருந்தாலும் பெரும் உயரத்திற்கு சென்ற இளம் இயக்குநர்களுள் ஒருவர், அட்லீ. ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என எடுத்த அனைத்து படங்களிலும் ஹிட் கொடுத்துள்ளார். இவர் ஜவான் படம் (Jawan Movie) மூலம் இறங்கிய களம், பாலிவுட். இந்த படத்தில், இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களுள் ஒருவரான ஷாருக்கானை ஹீரோவாக நடிக்க வைத்துள்ளார். இந்த படம், கடந்த செப்., 7 ஆம் தேதி வெளியானது. மேலும் இந்த படத்தில் நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாகவும், பிரியாமணி, யோகி பாபு, சான்யா மல்ஹோத்ரா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் அனிருத்தும் பாலிவுட்டில் கால் பதிக்கும் நிலையில், பாடல்களும் ரிலீஸாகி நல்ல வரவேற்பைப் பெற்றன. 


ஜவான் வசூல் நிலவரம்:
ஜவான் படம் வெளியான முதல் நாளிலேயே உலகளவில் 129 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டது. படம் வெளியாகி இன்று ஒரு வாரம் ஆன நிலையில் தற்போது வரை இப்படத்தின் அதிகாரப்பூர்வமான வசூல் 574 கோடி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் நாட்களில் கண்டிப்பாக இப்படம் ரூ. 1000 கோடியை கடந்து சாதனை படைக்கும் என்றும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | லண்டனில் கெத்து காட்ட தயாராகும் லியோ... வெளியான புதிய அறிவிப்பு..குஷியில் ரசிகர்கள்


கீர்த்தி சுரேஷ் மற்றும் பிரியா அட்லியின் மரண மாஸ் நடனம்:
இதனிடையே பாக்ஸ் ஆபீஸில் ஜவான் படம் சாதனைப் படைத்து வரும் நிலையில், தற்போது  ஜவான் பட பாடலுக்கு இயக்குநர் அட்லீயின் மனைவியான ப்ரியா அட்லீயுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் இணைந்து நடனமாடி வீடியோ பகிர்ந்துள்ளார். மேலும் இந்த வீடியோவில் கீர்த்தி சுரேஷின் செல்ல நாயுடன் அட்லீ இருவரையும் சுற்றி சுற்றி வரும் நிலையில், ரகளையாக இருவரும் நடனமாடியுள்ள காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இதில் பிரியா அட்லீயுடன் (Priya Atlee) கீர்த்தி சுரேஷ் (Keerthi Suresh) நடனமாட நடுவே நாயை விட்டு அவர்களது நடனத்தை கெடுத்து விடும் அட்லீயின் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.



 



இதனிடையே பாலிவுட் நடிகர் வருண் தவான், நடிகர் சாந்தனுவின் மனைவி கிகி விஜய் உள்ளிட்ட பலர் கீர்த்தி சுரேஷின் ஜவான் டான்ஸ் வீடியோவை பார்த்து வாவ் என கமெண்ட் செய்து வருகின்றனர். 


ஜவான் OTT ரிலீஸ் எப்போது?
இந்த நிலையில்  செப்டம்பர் முதல் வாரம் இந்த படம் வெளியான நிலையில் அக்டோபர் முதல் வாரம் இந்த படத்தை (Jawan OTT Release Date) ஓடிடியில் வெளியிட நெட்பிளிக்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் ‘ஜவான்’ திரைப்படத்தின் அனைத்து மொழிகளின் உரிமையை 250 கோடி ரூபாய்க்கு வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | ஆபரேசன் தியேட்டரில் மாரி! பரிகார பூஜையில் சூர்யாவுக்கு வரும் தடைகள்! மாரி சீரியல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ