தமிழ் திரையுலகிற்கு புது வரவாக வந்திருக்கும் அதிதி ஷங்கர் பல திறமைகளை கைவசம் வைத்திருப்பதாக அவரை பலரும் புகழ்ந்து வருகின்றனர். பிரபல இயக்குனர் ஷங்கரின் மகள் என்பதால் இவர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாதிலிருந்தே இவரது நடிப்பு எப்படி இருக்கும் என்று பலரும் பெரிய எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர். பிரபலத்தின் வாரிசு என்பதால் நடிக்கும் முதல் படத்திலேயே கொஞ்சம் மாடர்னாக நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் பக்கா கிராமத்து பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். முத்தையா இயக்கத்தில் கார்த்திக்கு ஜோடியாக இவர் நடித்துள்ள விருமன் படம் நல்ல வரவேற்பை பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனிடையே தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து 'மாவீரன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இதனைத் தொடர்ந்தது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அடுத்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இப்போது அந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. மேலும் இந்த படத்தில் அதிதிக்கு ஜோடியாக நடிகர் அதர்வா முரளியின் தம்பி ஆகாஷ் முரளி நடிக்க இருக்கிறார்.


மேலும் படிக்க | பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விலகும் அடுத்த முக்கிய நடிகர்..


இந்த நிலையில் படு பிஸியாக நடித்து வரும் நடிகை அதிதி ஷங்கர் தற்போது மற்றொரு படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதன்படி  'முண்டாசுப்பட்டி', 'ராட்சசன்' படங்களை இயக்கிய ராம்குமார் இயக்கும் புதுப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷாலுடன் நடிகை அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் ‘முண்டாசுப்பட்டி’ படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்படுகிறது.


இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மே முதல் வாரம் நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.


மேலும் படிக்க | சமந்தா, ராஷ்மிகாவை விட அதிகளவில் சம்பளம் வாங்கும் புதிய நடிகை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ