விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ ஹிட்டா? பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம்..!
விஷால் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படத்தின் தெலுங்கு பாக்ஸ் ஆஃபீஸ் நிலவரம் வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் ’வீரமே வாகை சூடும்’ திரைப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் டிம்பிள் ஹியாதி மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷாலின் சொந்த நிறுவனமான விஷால் ஃபிலிம் ஃபேக்டரி படத்தை தயாரித்துள்ளது.
ALSO READ | 'மருது' படத்தை தொடர்ந்து மீண்டும் முத்தையாவுடன் விஷால்?
தெலுங்கில் ’சாமன்யுடு’ என்ற தலைப்பில் இப்படம் வெளியாகியிருக்கிறது. விஷாலைப் பொறுத்தவரை தமிழைப்போலவே தெலுங்கிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அண்மையில் தெலுங்கில் வெளியிடப்பட்ட டிரைலருக்கும் அங்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஆனால், தெலங்கானா, ஆந்திராவில் திரையிடப்பட்ட இப்படத்துக்கு பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதா? என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ALSO READ | மார்க் அண்டனிக்கு உயிர்கொடுக்கும் ஜிவி
ஏனென்றால் வெளியீட்டிற்கு முன்பே 5 கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு படத்தின் வியாபாரம் நடந்துள்ளது. தெலுங்கானா 2 கோடி ரூபாய்க்கும், ராயலசீமா உள்ளிட்ட பகுதிகளில் முறையே 3.10 லட்சம் ரூபாய்க்கும் ஃப்ரீ ரிலீஸ் வியாபாரம் நடந்துள்ளது. இந்தப் படம் பாக்ஸ் ஆஃபீஸ் ரீதியாக வெற்றி பெற வேண்டும் என்றால் 5.50 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷனை பெற வேண்டும். வெளியீட்டு நாளான இன்று ரசிகர்களின் தியேட்டர் வருகை குறைவாக இருப்பதால், நினைத்த வெற்றி கிடைக்குமா? என்பது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ரசிகர்களின் வருகையை விநியோகிஸ்தர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR