கௌதம் வாசுதேவ் மேனனின் உதவி இயக்குனர்களுள் ஒருவரான மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் இன்று வெளியாகி உள்ள திரைப்படம் 'FIR'.   இப்படத்தை விவி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் சுப்ரா மற்றும் ஆர்யன் ரமேஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.  ஆக்ஷன் திரில்லர் கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான், பார்வதி, கௌரவ் நாராயணன், பிரசாந்த் ரங்கசாமி ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படத்தின் பாடல்களுக்கு அஸ்வத் இசையமைத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | FIR படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


இப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் போலீசாகவும், விஷ்ணு விஷால் தேடப்படும் ஒரு இஸ்லாமிய இளைஞனாகவும் நடித்துள்ளார்.  கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு  பிப்ரவரி 1 அன்று நிறைவடைந்தது.  தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிப்ரவரி 11ம் தேதி இத்திரைப்படம் வெளியிடப்படும் என்று கூறிய நிலையில் இப்படத்தை குவைத் மற்றும் மலேசியாவில் வெளியிட அவ்விரு நாடுகளும் தடை விதித்து இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  



இந்த படம் விஷ்ணு விஷாலின் கேரியரில் நல்ல திருப்புமுனையாக என்று எதிர்பார்த்து வந்த நிலையில் எதிர்பாராதவிதமாக இந்த இரு நாடுகளும் இப்படத்திற்கு தடை விதித்த செய்தி இணையத்தில் தீயாய் பரவியது.  இந்த நிலைமை குறித்து படத்தின் கதாநாயகன் அவரது சமூக வலைதள பக்கத்தில் அந்த இரு நாடுகளில் வசிக்கும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக  “Sorry #Kuwait and #Malaysia” என்று பதிவிட்டுள்ளார்.  மேலும் கத்தார் நாட்டிலும் இப்படம் வெளியாகவில்லை.  இந்த சம்பவத்தின் மூலம் தன்னால் ரசிகர்களிடம் இப்படத்தை கொண்டு சேர்க்க முடியாமல் போனது எனக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது என்று விஷ்ணு விஷால் வருத்தம் தெரிவித்துள்ளார்.  


 



மலேசியா மற்றும் குவைத்தில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை தொடர்ந்து இந்திய கட்சியின்  தலைவர் தடா ரஹீமும் இப்படத்திற்கு தடை விதிக்கக்கோரி புகார் அளித்து இருக்கிறார்.  ஏனெனில் இந்த படத்தில் இஸ்லாமியர்களை தவறான கண்னோட்டத்தில் சித்தரித்து இருப்பதால், இந்த சமூகத்தை சேர்ந்தவர்களின் வாழ்க்கை நலனில் பாதிப்பு ஏற்படும், அதனால் இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருக்கிறார்.


மேலும் படிக்க | மகான் படம் எப்படி இருக்கு?- திரை விமர்சனம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR