FIR படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

தனது சொந்த நிறுவனமான vv studioz தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடித்துள்ள FIR படம் பிப்ரவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 10, 2022, 08:28 AM IST
  • எப்ஐஆர் படம் ஒரு ஆக்சன் நிறைந்த திரில்லர் படமாகும்.
  • பல பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள் என்பதை விட வாழ்ந்தூள்ளார்கள் என்றே கூறலாம்.
FIR படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்! title=

Vv studioz தயாரிப்பில் விஷ்ணு விஷால் நடிக்கும் எப்ஐஆர் திரைப்படம் பிப்ரவரி 11, 2022 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதனை கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய மனு ஆனந்த் இயக்கியுள்ளார். இப்படத்தில் விஷ்ணு விஷால் இர்ஃபான் அகமது என்ற கதாபாத்திரத்திலும், கவுதம் வாசுதேவ் மேனன் அஜய் திவான் என்ற கதாபாத்திரத்திலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆன ரைசா வில்சன் அனிஷா குரேஷி ஆகவும், ரேபா மோனிகா அர்ச்சனா வாகவும் மற்றும் பல பிரபல நடிகர்களும் நடித்துள்ளார்கள் என்பதை விட வாழ்ந்தூள்ளார்கள் என்றே கூறலாம்.

மேலும் படிக்க | நெல்சனுடன் ரஜினி இணையும் படத்தின் கதை இதுவா?

எப்ஐஆர் படம் ஒரு ஆக்சன் நிறைந்த திரில்லர் படமாகும்.  இதில் ஐஐடி-யில் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையில் கோல்ட் மெடல் பட்டம் பெற்று வளர்ந்து வரும் ஒரு சிறிய கெமிக்கல் கம்பெனியில்  பணியாற்றி வருகிறார். அப்படி பணியாற்றி வரும் போது வேலை காரணமாக கெமிக்கல் வாங்க கோயம்புத்தூர் செல்கிறார். அதே சமயம் தென் இந்தியவிலும் இலங்கையிலும் ஐஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் தாக்குதல் நடத்தப்போவதாக தேசிய புலனாய்வு துறைக்கு கிடைத்த தகவலின் படி கவுதம் வாசுதேவ் மேனன் தலைமையில் சிறப்பு படை தீவிரவாத இயக்கத்தின் தலைவரை பிடிக்க செயல்பட்டுக் கொண்டு இருந்த நிலையில்  ஹைதராபாத் ஏற்போர்ட்யில் எற்பட்ட குண்டு வெடிப்பில் கிடைத்த தடையங்களை வைத்து விஷ்ணு விஷாலை சந்தேக பெயரில் கைது செய்தது. 

இதனை அடுத்து சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்ட விஷ்ணு விஷால், அதில் இருந்து எப்படி தப்பிக்கிறார், புலனாய்வின் பெயரில் தேசிய புலனாய்வு துறை என்ன செய்தது என்பதை குறித்து பல ட்விஸ்ட்களை கொண்டது தான் மீதி கதை. சில காலமாக முஸ்லீம் என்றாலே தீவிரவாதம் என்ற ஒரு அவநம்பிக்கை இருந்து வரும் பட்சத்தில் அதை அடியோடு தகர்க்கும் விதமாக இப்படத்தில் இயக்குனர் மனு ஆனந்த்  கையாண்டு உள்ளர்.

fir

மத வெறி பிடித்த இந்த சமூகத்தில் மதரீதியான படத்தையும் அதில் உள்ள பிரச்சனைகளை  பற்றியும் படமாக்க ஒரு தனி தைரியமும் துணிச்சலும் வேண்டும். அப்படி ஒரு துணிச்சலோடு மற்ற இயக்குனர்களை போல் இல்லாமல் ப்பிரேம் பை ப்பிரேம் எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் காமெடியோடு சொல்ல வரும் கருத்தை மிக தெளிவாக படம் பார்பவர் மனதில் பதியும் வண்ணம் அழகிய வசனங்களை கொண்டு காட்சி படுத்தியுள்ளார், இருப்பினும் படத்தில் புலனாய்வு விசாரணை சீனில் இயக்குனர் சிறிதுபுலனாய்வு செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.

மேலும் படிக்க | கார்த்திக் சுப்புராஜ் கதையில் உருவாகும் இயக்குநர் சங்கர் திரைப்படம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News