விஸ்வாசம் திரைப்படத்தில் நடிகர் அஜீத்தை தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாராவின் காதபாத்திர தோற்ற புகைப்படம் வெளியாகியுள்ளது! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயக்குநர் சிவா மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் விஸ்வாசம். இந்தப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. மேலும், விஸ்வாசம் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்தப் படத்தின் மூலம் அஜித்துக்கு முதன்முதலாக இசையமைக்கிறார் டி. இமான். படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், இதுவரை இரண்டு போஸ்டர்கள் மட்டுமே படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளன. பொங்கலுக்கு ரிலீசாக இருக்கும் விஸ்வாசம் படத்துடன் ரஜினிகாந்தின் பேட்ட, சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன், ஆர்.ஜே.பாலாஜியின் எல்.கே.ஜி ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கின்றன.


இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், செகண்ட் லுக், மோஷன் போஸ்டர் என வெளியான அனைத்திலுமே அஜித்தின் லுக் மட்டுமே வெளியிடப்பட்டிருந்தது. ஹீரோயினான நயனோ, மற்ற நடிகர்களோ அதில் இடம் பெறாமல் இருந்தார்கள். தற்போது நயன்தாராவின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. சேலை, கழுத்தில் நகைகள் நெற்றி வகிட்டில் குங்குமம் என இருக்கும் நயன் இதில் அஜித்தின் மனைவியாக நடித்துள்ளார் என்பது இதன் மூலம் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.