நான் முத்தமிடுவதை என் மகள் விரும்பவில்லை - விவேக் ஓபராய்
சினிமாவில் தான் முத்தமிடுவதை தனது மகள் விரும்பவில்லை என விவேக் ஓபராய் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விவேக் ஓபராய்க்கு பலர் ரசிகர்களாக இருக்கின்றனர். இவர் தமிழில் சிவா இயக்கத்தில் அஜித்துடன் விவேகம் படத்திலும், சூர்யாவுடன் ரத்த சரித்திரம் படத்திலும் நடித்திருக்கிறார்.இவருக்கு திருமணமாகி ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.
திரையுலகில் 20 வருடங்களை நிறைவு செய்திருக்கும் அவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், “என் மகன் மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்தான்.
மேலும் படிக்க | ஊரெல்லாம் ‘ஸ்வர்ணலதா’ பாட்டு உள்ளத்தை மீட்டுது...
நீங்கள்தான் இந்த பைக் ஸ்டண்ட்ஸ் எல்லாம் செய்தீர்களா என்று என்னிடம் கேட்டான். என் இளைய மகள் என்னிடம் வந்து, 'அப்பா, நீங்கள் அம்மா அல்லாத ஒருவரை முத்தமிடுவது எனக்கு பிடிக்கவில்லை. அம்மா அல்லாத இன்னொருவரை முத்தமிட உங்களுக்கு அனுமதி இல்லை என்றாள்.
கொரோனா ஊரடங்கின்போதுதான் என்னுடைய பிள்ளைகளுக்கு உட்கார்ந்து என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்க நேரம் கிடைத்தது. மக்கள் ஏன் என்னை ஃபோட்டோ எடுக்கிறார்கள், ஏன் ஆட்டோகிராஃப் கேட்கிறார்கள். உங்களுடன் செல்ஃபி எடுத்தவர்களை உங்களுக்குத் தெரியுமா? அவர்கள் உங்கள் நண்பர்களா? என்று அவர்கள் எக்கச்சக்கமான கேள்விகளை குழந்தைத்தனமாக கேட்டார்கள்.
மேலும் படிக்க | வசனம் இல்லாமல் மிரட்டும் ஆண்ட்ரியா - வெளியானது பிசாசு 2 டீசர்
பின்னர் நான் அவர்களுக்கு எனது ரசிகர்கள் பட்டாளம், திரையுலக புகழ் வெளிச்சம் குறித்து விளக்கிக் கூறினேன். அவர்கள் அதை மெதுவாக புரிந்துகொண்டனர்” என்றார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR