நடிகை சித்ராவின் தற்கொலைக்கு அவரது கணவர் மற்றும் தாய் தரப்பில் கொடுக்கப்பட்ட மன அழுத்தமே முக்கிய காரணம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த புதன் கிழமை சென்னை நசரத்பேட்டையில் உள்ள தனியார் விடுதியில் சின்னத்திரை நடிகை சித்ரா (VJ Chitra) தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். நடிகை சித்ராவின் மரணம் கொலையா? அல்லது தற்கொலையா? என விவாதிக்கப்பட்டு வந்த நிலையில், பிரேத பரிசோதனையின் முதல் கட்ட தகவலின்படி சித்ரா தற்கொலை தான் செய்துக்கொண்டதாக காவல்ததுறை தகவல் தெரிவித்தது. மேலும், சித்ராவின் கன்னத்தில் இருந்த நகக்கீறல் அவருடையது தான் என்றும் காவல்துறை தெரிவித்தது.



இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலைக்கு கணவர், தாய் என இரண்டு தரப்பிலும் கொடுத்த மன அழுத்தமே காரணம் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. கணவர் ஹேம்நாத் குடித்துவிட்டு படப்பிடிப்பு தளத்திற்கு சென்று சித்ராவிடம் பிரச்னை செய்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 


ALSO READ | நடிகை சித்ரா மரணத்திற்க்கு முன் ஹோட்டலில் தங்கியது ஏன்?




பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த VJ சித்ராவின் மரணம் சின்னத்திரையில் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியான ’ஸ்டார்ட் மியூஸிக்’ என்ற ரியாலிட்டி ஷோவின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு அதிகாலை மழை பெய்யுமோ என்று அஞ்சி பக்கத்தில் இருக்கும் ஹோட்டலில் தங்கி இருக்கிறார் சித்ரா. அவருடன் திருமணம் செய்த ஹேமந்த் ரவியும் அந்த ஹோட்டலில் தங்கியுள்ளார். 



இதையடுத்து, தனது படப்பிடிப்பை முடித்து விட்டு 2 மணியளவில் விடுதி அறைக்கு வந்த சித்ரா, தனது கணவரிடம், குளிக்க போவதாக சொல்லி ஹேமந்த்தை வெளியில் நிற்க சொல்லி இருக்கிறார். நீண்ட நேரம் ஆகியும், சித்ரா வெளியில் வராத நிலையில், மாற்று சாவி மூலம் திறந்து பார்க்கும் போது அறையில் உள்ள மின்விசிறியில் சேலையை கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR