இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் வருகிற 3 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் சேதுபதி பகத் பாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் இதன் பாடல்கள் சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. இப்படத்தின் ரிலீஸ் பணிகள் தற்போது நடந்துவருகின்றன. இதனிடையே லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக யாரை இயக்கப்போகிறார் எனும் எதிர்பார்ப்பு திரை வட்டாரத்தில் எழுந்துள்ளது.


 மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய்யை அவர் மீண்டும் இயக்கவுள்ளதாகவும் விஜய்யின் 67ஆவது படமாக அது இருக்கும் எனவும் கூறப்பட்டு வந்தது.


                                


விக்ரம் ஆடியோ ரிலீஸ் விழாவில் விஜய் கலந்துகொள்ளும் பட்சத்தில் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விஜய்யும் கலந்துகொள்ளவில்லை பட அறிவிப்பும் வெளியாகவில்லை.


இந்நிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு கதை கூறியுள்ளதாகவும் அந்தக் கதையை வேறு சிலர் நடிகர்களுக்கும் அவர் கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ராம்சரணின் கால்ஷீட் சரியாக அமையும் பட்சத்தில் இப்படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. 


                                                                     


மேலும் படிக்க | அப்டேட் கேட்ட ரசிகர்கள்- சர்ப்ரைஸ் ட்ரீட் வைத்த ‘சலார்’ படக்குழு!


 


இந்நிலையில், ராம் சரணுக்கு கூறிய கதைதான் விஜய்க்கும் கூறப்பட்டதா அல்லது அது வேறு கதையா எனும் கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அதே கதைதான் எனில் இதற்கு ராம்சரண் ஓக்கே ஆகிவிடும் பட்சத்தில் விஜய்- லோகேஷ் கனகராஜ் படம் கைவிடப்படுமா எனவும் ரசிகர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க | KGF- 2 ‘பெரியப்பா’ பற்றி டைரக்டர் ஷங்கர் சொல்வது என்ன?!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR