ஆர்ஜிவி என்று பிரபலமாக அறியப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளார், இவரின் சமீபத்திய செயல் அருவருக்கதக்க வகையில் இருப்பதால் இவரை நெட்டிசன்கள் பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.  கடந்த டிசம்பர் 6ம் தேத்தியயன்று ராம் கோபால் வர்மா அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார், அந்த புகைப்படத்தில் அவர் நடிகை ஆஷு ரெட்டியின் கால்களை முத்தமிடுவதைக் காண முடிந்தது, மற்றொரு புகைப்படத்தில் அவர் அந்த நடிகையின் கால் பாதங்களை தடவுவதை காணமுடிகிறது.  இந்த புகைப்படம் அவர் அந்த அந்த நடிகையுடன் நேர்காணலில் இருந்தபோது எடுக்கப்பட்டது என்று அவரது ட்வீட்டின் மூலம் தெரியவந்தது, பின்னர் சிறிது நேரத்தில் அவர் தனது யூடியூப் சேனலில் அந்த 'டேஞ்சரஸ்' பட நேர்காணலின் முழு வீடியோவையும் வெளியிட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | 'அருவா' படத்தை மீண்டும் தொடங்கும் ஹரி மற்றும் சூர்யா?


அந்த டேஞ்சரஸ் பட நேர்காணல் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது, அந்த வீடியோவில் நடிகை அஷு ஷெட்டி சோபாவில் அமர்ந்து இருக்கிறார், அவரது காலுக்கு அருகில் கீழே தரையில் இயக்குனர் ராம் கோபாலும் அமர்ந்து இருக்கிறார்.  அவர் அப்படி தரையில் அமர்ந்து இருப்பதற்கு காரணம் பெண்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதை அனைவருக்கும் நினைவூட்டுவதற்காகவே என்று பிரபல மூத்த இயக்குனர் தெளிவுபடுத்துகிறார்.  அந்த நடிகையிடம் ராம் கோபால் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறார், சிறிது நேரத்தில் அந்த பெண்ணின் அனுமதியுடன் அவரது காலணியை அகற்றிவிட்டு காலில் முத்தமிடுகிறார் அதுமட்டுமல்லாது அந்த பெண்ணின் கால் விரல்களையும் வாயால் சுவைக்கிறார்.



இந்த வீடியோ இணையத்தில் பரவியதும் நெட்டிசன்கள் பலரும் படத்தை விளம்பரப்படுத்த எந்த எல்லைக்கும் செல்கிறார் என்றும், அருவருப்பானவர் என்றும் அவரை திட்டித்தீர்த்து வருகின்றனர்.  தற்போது ராம் கோபால் வர்மா இயக்கிய 'டேஞ்சரஸ்' படம் லெஸ்பியன்களை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது, லெஸ்பியன் தம்பதிகள் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த சமூகத்தோடு எவ்வளவு போராடுகிறார்கள் என்பதை இப்படத்தில் காட்டியுள்ளார்.  இதில் அப்சரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகியோர் லெஸ்பியன் தம்பதிகளாக நடிக்கின்றனர், இப்படம் டிசம்பர்-9ம் தேதி வெளியாகவுள்ளது.



மேலும் படிக்க | முதல் படத்தின் சம்பளம் எவ்வளவு? ஓபனாக பேசிய லோகேஷ் கனகராஜ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ