அஜித் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? இத்தனை கோடிகளா?
Ajith Kumar Salary Details: அஜித் தனது 63 ஆவது படத்திற்கு எவ்வளவு கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
அஜித் வாங்கும் சம்பள விவரம்: அஜித் நடிக்கும் 63வது (AK 63 Movie Update) திரைப்படத்திற்கு ரூ. 163 கோடியை சம்பளமாக பெறவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது கோலிவுட்டை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகர் அஜித்குமார்:
நடிகர் அஜித்குமார் (Ajith Kumar), 90களில் திரைக்கு வந்து இன்றுவரை தமிழ் சினிமாவை ஆட்சி புரிந்து வரும் பெரும் நடிகராக உள்ளார். காதல் மன்னன், ஆக்ஷன் ஹீரோ, நெகடிவ் ஷேட் நாயகன் என பல அவதாரங்கள் எடுத்த இவர், கடைசியாக நடித்த படம் துணிவு. கடந்த ஜனவரி மாதம் ரிலீஸான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இவர் அடுத்து நடிக்கவுள்ள படம் ‘விடாமுயற்சி’. இந்த திரைப்படத்தை பிரபல இயக்குநர் மகிஷ் திருமேனி இயக்குகிறார். நடிகை த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித் நடிக்கும் 63வது படம்:
இந்நிலையில் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் ஆதிக் ரவிச்சந்திரன் (Director Adhik Ravichandran) இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி பரவின. இதனிடையே த்ரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், பகீரா படங்களை இயக்கய இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமார் நடிக்கும் 63வது திரைப்படத்தை இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான மார்க் ஆண்டனி படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த திரைப்படத்தை எல்ரெட் குமார் தயாரிக்கவுள்ளார். அதுமட்டுமின்றி இந்த திரைப்படத்தில் நடிக்க நடிகர் அஜித்குமார் 170 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார் என கூறப்பட்டது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவலின்படி, இந்த திரைப்படத்தில் நடக்க 163 கோடி ரூபாய் தான் அஜித்குமார் சம்பளமாக வாங்கியுள்ளாராம். மேலும் இது தான் அஜித்குமார் கேரியரில் அதிகமான சம்பளமாகும். இது கோலிவுட்டை பரபரப்பில் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | லியோ படத்தின் ‘ஸ்பெஷல்’ புகைப்படங்களை வெளியிட்ட த்ரிஷா!
ஆதிக் ரவிச்சந்திரன் விஷாலை வைத்து இயக்கிய மார்க் ஆண்டனி படம் ரிலீஸாகி சூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. படம் பார்த்த அனைவரும் ஆதிக்கை பாராட்டி வருகிறார்கள். ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்த கையோடு தனக்கு பிடித்த நடிகரான அஜித் குமாரை வைத்து படம் இயக்கப் போகிறாராம் என்பது குறிப்பிடத்தக்கது.
விடா முயற்சி படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள்:
இதனிடையே விடா முயற்சி திரைப்படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் வேலைகள் முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி படத்தின் டெக்னிகல் துறை கலைஞர்கள் கடந்த 24ஆம் தேதி படப்பிடிப்பு தளத்திற்கு சென்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக ஆசியாவில் பல்வேறு இடங்களை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க | ஒன்றா ரெண்டா…ரிலீஸாவதற்கு முன்னரே ‘லியோ’ படம் சந்தித்த சர்ச்சைகள்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ