ராஜமெளலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது. பிரம்மாண்ட பொருட்செலவில் பல்வேறு மொழிகளில் பல நாடுகளில் வெளியான இப்படம் பெரும் வசூலையும் ஈட்டியுள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் மட்டும் சுமார் 300 கோடி ரூபாய் வசூலை இப்படம் குவித்துள்ளதாம். ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தியேட்டர் டிக்கெட் விலை உயர்த்தப்பட்டதால் கூடுதல் வசூல் கிடைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 ‘ஆர்.ஆர்.ஆர்’  படத்தைப் பொறுத்தவரை, அதிக வசூல் செய்த தென்னிந்தியத் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் 2ஆவது இடத்தில் உள்ளது. அதேநேரம்,  அதிக வசூல் செய்த இந்தியப் படங்கள் பட்டியலில் ஆர்.ஆர்.ஆர் 5ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் இதுவரை ஒட்டுமொத்தமாக சுமார் 900 கோடி ரூபாய் வசூலை இப்படம் ஈட்டியுள்ள நிலையில் விரைவில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை இப்படம் எட்டிப் பிடிக்கவுள்ளது. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் வசூலில் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


                                                                             


மேலும் படிக்க | ‘பான் இந்தியா’வுக்குப் பெருமை சேர்த்ததா RRR?


இதனிடையே ஆ.ஆர்.ஆர் திரைப்பட உருவாக்கத்தில் பணிபுரிந்த டைரக்சன் டிபார்ட்மெண்டுக்கு  நடிகர் ராம்சரண் தங்க நாணயங்களை வழங்கிக் கெளரவப்படுத்தியுள்ளார். ஆர்.ஆர்.ஆர் எனும் பெயர் பொறிக்கப்பட்ட சுமார் 10 கிராம் தங்க நாணயங்கள்,  டைரக்சன் டிபார்ட்மெண்டில் பணிபுரிந்த அனைவருக்கும் ராம்சரணால் வழங்கப்பட்டன. நடிகர் ராம்சரணின் இந்தச் செயல் ரசிகர்கள் மட்டுமல்லாது திரையுலகினர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்துக்கு அரசு திடீர் தடை! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR