லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா திருமண ஏற்பாடு பிஸியில் இருக்கிறார். நீண்ட நாட்களாக காதலர்களாக இருக்கும் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் விரைவில் திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்க இருக்கின்றனர். அதனால், இருவரும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருப்பதி சென்ற இருவரும், அண்மையில் வழுத்தூரில் இருக்கும் விக்னேஷ் சிவனின் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்ட லெஜெண்ட் சரவணன்!


வழுத்தூர் கிராமத்துக்கு விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சென்றதால், அப்பகுதியில் கிராம மக்களின் கூட்டம் அலைமோதியது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை, இருவரையும் பார்க்க ஆர்வமாக குவிந்தனர். அதன்பின் சென்னை வந்த நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திரை விழாக்களில் பங்கெடுத்தனர். விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நயன்தாராவுக்கு சிறந்த நடிக்கைக்கான விருது கொடுத்தனர். அப்போது, விக்னேஷ் சிவனும் உடனிருந்தார்.



நயன்தாரா விருதை பெற்ற பிறகு மேடை ஏறிய விக்னேஷ் சிவனிடம், தொகுப்பாளினி டிடி திடீரென ஒரு கேள்வியை முன்வைத்தார். அதாவது நயன்தாராவுக்கு என்ன உடை சரியாக இருக்கும் என கேட்டுவிட்டார். விக்னேஷ் சிவன் யோசிக்க, நயன்தார சிரிப்பை உதிர்க்க காணொளியில் ரசிகர்கள் பேசிய பதில்கள் ஒளிபரப்பப்பட்டன. அதில், பச்சை, மஞ்சள் என நயன்தாரா திரையில் தோன்றியதில் தங்களுக்குப் பிடித்த உடைகளை எல்லாம் கூறினர். ரசிகர் ஒருவர் மட்டும் வருணித்தார். அதன்பிறகு, விக்னேஷ் சிவனிடம் கேட்க, சிரித்துக் கொண்டே ‘அவங்களுக்கு எது போட்டாலும் அழகா தான் இருப்பாங்க’ என மழுப்பலாக பதிலளித்து முடித்தார்.   


மேலும் படிக்க | கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR