லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் காமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'விக்ரம்' படம் ஜூன்-3ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போது இயக்குனர் லோகேஷும், நடிகர் கமலும் படத்திற்கான புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருந்து வருகின்றனர். இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு 29ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | விக்ரம்: சென்சார்ல கட் ஆன சீன்ஸ் என்னென்ன தெரியுமா?! - இதோ பட்டியல்!
ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் கமலுடன் சேர்த்து முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் நடித்துள்ளனனர். மேலும் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் சூர்யாவும் நடித்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவிருக்கிறது. தற்போது பல படங்கள் ஓடிடியில் வெளியாக தொடங்கிவிட்டன, அந்த வகையில் இப்படத்தின் டிஜிட்டல் வெளியீடு குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி, 'விக்ரம்' படத்தின் சேட்டிலைட் உரிமையை விஜய் டிவியும், ஓடிடி வெளியீட்டு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரும் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 'விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நிகழ்வை விஜய் டிவி தான் ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. மேலும் வெளியான தகவல்களின்படி, இப்படம் ஓடிடியில் ஆகஸ்ட் மாதம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் படம் திரையரங்கில் வெளியான பிறகு படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடும். தற்போது கமல்ஹாசன் விக்ரம் படத்தின் புரமோஷன் வேளைகளில் தீவிரமாக இறங்கி உள்ளார். மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு பயணம் செய்து வருகிறார்.
மேலும் படிக்க | ஷங்கர் இயக்கும் ராம் சரண் படத்தின் டைட்டில்! - தலைப்புக்கு இதுதான் ரீஸனா?!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR