தமிழ் சீரியல் நடிகர் இந்திர குமாரின் மரணத்தில் தொடரும் மர்மம், அதிர்ச்சியில் சின்னத்திரை
தமிழ் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் திரைத்துறை, பொழுதுபோக்கு துறையில் உள்ள பலர் சமீப காலங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
சென்னை: சின்னத்திரையைப் பொறுத்தவரை, சமீப காலங்களில் பல சோகமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சின்னத்திரையில் மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் திரைத்துறை, பொழுதுபோக்கு துறையில் உள்ள பலர் சமீப காலங்களில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது வேதனைக்குரிய விஷயமாகும்.
தமிழ் தொலைக்காட்சி நடிகர் (TV Actor) இந்திர குமார் வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார் என்ற வருத்தமான செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சில தினங்களுக்கு முன்னர்தான் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்துக் கொண்டார். சில நாட்களுக்குள்ளேயே இப்படிப்பட்ட அடுத்த தற்கொலை செய்தி வந்துள்ளது.
வியாழக்கிழமை இரவு சென்னையில் தனது நண்பரின் வீட்டிற்கு இந்திர குமார் சென்றதாக ஊடக அறிக்கைகள் தெரிவிகின்றன. நண்பர்களுடன் சேர்ந்து அவர் திரைப்படம் ஒன்றை பார்த்திருக்கிறார். பின்னர், அறைக்குள் சென்ற அவர் காலையில் வெளியே வரவில்லை. அவர் பதில் எதுவும் அளிக்காத நிலையில் அவரது நண்பர்கள் அறைக்குள் சென்றனர். அப்போது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
ALSO READ: #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?
அதன்பிறகு, அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 25 வயதான இந்திர குமார் ஒரு இலங்கை தமிழராவார். அவர் சென்னையில் உள்ள அகதி முகாமில் தங்கியிருந்தார்.
திரைப்படங்களில் நடிக்க நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் இந்திரகுமார் மனமுடைந்திருந்தார் என்று கூறப்படுகிறது. மேலும் அவரது மனைவியுடனும் அவருக்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளதாகத் தெரிகிறது. எனினும் இந்திர குமார் இவ்வளவு பெரிய முடிவை எடுப்பார் என யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது தற்கொலை (Suicide) அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் உள்ளது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.
இதற்கிடையில், திங்களன்று, மும்பையின் கோரேகான் பகுதியில் சுஷாந்த் சிங் ராஜ்புத்துடன் எம்.எஸ்.தோனி படத்தில் நடித்த நடிகர் சந்தீப் நஹர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்பட்டது. வழக்கு பதிவு செய்யப்பட்டு இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
தூக்கிலிடப்பட்டி இறந்த நிலையில் இருந்த அவரது உடலை மேலும் இரண்டு பேருடன் மீட்டதாக அவரது மனைவி போலீசாரிடம் தெரிவித்தார். துணை போலீஸ் கமிஷனர் விஷால் தாக்கூர், "உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது, அதன் பின்னர் அவரது மரணத்திற்கான சரியான காரணத்தை அறிய முடியும்," என்று அவர் கூறினார்.
கேசரி மற்றும் எம்.எஸ். தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி ஆகியவற்றில் பணிபுரிந்த நஹார் பேஸ்புக்கில் ஒரு குறிப்பை கொடுத்திருந்தார். அதில் அவர் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறியிருந்தார்.
ALSO READ: சுஷாந்தின் மரணத்துக்கு நீதி வேண்டும், PM Modi-க்கு சுஷாந்தின் சகோதரி கடிதம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR