போன் ஸ்விட்ச் ஆஃப்.. தொடர்பு கொள்ள முடியவில்லை? தலைமறைவாகி விட்டாரா ஜெயம் ரவி?
Where Is Jayam Ravi After The Divorce: நடிகர் ஜெயம் ரவிவை தொடர்ப்புக் கொள்ள முடியாததால், அவரது குடும்பம் மற்றும் படம் தயாரித்த தயாரிப்பாளார்கள் கவலையில் உள்ளனர்.
Jayam Ravi Divorce Updates: ஜெயம் ரவி-ஆர்த்தி விவகாரம் பேசுப்பொருளாக மாறியுள்ள நிலையில், தற்போது ஜெயம் ரவிவை தொடர்புக்கொள்ள முடியவில்லை, அவரது போனும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு உள்ளது. அவர் தலைமறைவாகி விட்டாரா? என பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆர்த்தி விவாகரத்து செய்து பிரிந்து விட்டதாக நடிகர் ஜெயம் ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் விவாகரத்துக்கான காரணத்தை குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை. அவரைத் தொடர்புக்கொள்ள பல ஊடகம் முயற்ச்சி செய்தனர். ஆனால் அவர் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால், அவரிடம் பேசமுடியவில்லை.
அது உண்மை தான் என நிரூபிக்கும் வகையில், ஆர்த்தி ரவி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் நான் தொடர்ந்து ஜெயம் ரவியிடம் பேச முயற்சி செய்கிறேன். ஆனால் என்னிடம் பேசவில்லை. அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை எனக் கூறியிருந்தார் என்பது இங்கே கவனிக்கதக்கது.
மேலும் படிக்க - நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து செய்ய காரணம் இதுதானா? வெளியான தகவல்!
அதேநேரம் ஆர்த்தி சில வாரங்களுக்கு முன்னாடி ஜெயம் ரவி வீட்டுக்கு நேராவே போயிருக்கிறார். அப்பொழுது அவர்கள் வீட்டில் இருந்தவர்கள், அவன் (ஜெயம் ரவி) வீட்டை விட்டு போய் ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது. அவன் எங்க இருக்கான், எப்படி இருக்கான் என்பதை அறிந்துக்கொள்ள எங்களால் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை. சில சமயங்களில் திடீர் என்று வருகிறார். சிறிது நேரம் வீட்டில் இருக்கிறார். உடனே கிளம்பி சென்று விடுகிறார். அவனிடம் (ஜெயம் ரவி) எங்க போற, எங்க இருக்க என்று கேட்டா கூட சரியான பதில் சொல்வதில்லை. நீங்க வந்து அவன் எங்க என்று எங்களிடம் கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்லறது. இதைத்தான் சொல்ல வேண்டி இருக்கு என ஜெயம் ரவி வீட்டார் தெரிவித்து உள்ளனர்.
ஆர்த்தியை விவாகரத்து செய்து விட்டதாக கூறிவிட்டு நடிகர் ஜெயம் ரவி ஓடி ஒழிந்துக் கொண்டாரா? என சமூக ஊடகங்களில் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகர் ஜெயம் ரவிவை தொடர்ப்புக் கொள்ள முடியாததால், அவரது குடும்பம் மட்டுமில்லை, அவரை நம்பி பணம் போட்டு படம் தயாரித்த தயாரிப்பாளார்களும் கவலையில் உள்ளனர்.
உங்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகளை பேசி தீர்த்துக்கொள்ளுங்கள். இரு குடும்பங்களும் உட்கார்ந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காணுங்கள். தீர்வு ஏற்படவிட்டால், இரு வீட்டாரின் சம்மதத்துடன், உங்கள் எதிர்காலம் குறித்து முடிவெடுங்கள். ஆனால் அதை எல்லாம் செய்யாமல், போனை ஆப் செய்துவிட்டு, தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பது என்பது, எந்த விதத்திலும் தீர்வு கிடைக்காது. அது நடிகர் ஜெயம் ரவியின் எதிர்காலத்தை தான் பாதிக்கும் என சமூக வலைத்தளத்ங்களில் பலர் தங்கள் கருத்தை பகிர்ந்து வருகின்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ