Why Jyothika Did Not Attend Kanguva Audio Launch With Suriya : ‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம், கங்குவா. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜாேடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கங்குவா இசை வெளியீட்டு விழா:


சூர்யாவின் கங்குவா படத்தை, ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரம்மாண்டமான அளவில் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைப்பெற்றது. 2 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் சூர்யாவின் பெரிய படம் என்பதால், இந்த விழாவை எதிர்நோக்கி பலர் காத்துக்கொண்டுள்ளனர்.


கங்குவா இசை வெளியீட்டு விழாவில், சூர்யா, திஷா பதானி, பாபி டியோல், சிவா, நட்ராஜ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இதில் சூர்யா பேசிய சில விஷயங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இவ்விழாவில் கவனிக்க வேண்டிய பல விஷயங்கள் நடந்திருந்தாலும், முக்கிய விஷயமாக பார்க்கப்படுவது, ஜாேதிகா இதில் கலந்து கொள்ளாததுதான். 


சென்னையில் இல்லை..


நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் தங்களது பிள்ளைகள் தியா மற்றும் தேவ் உடன் சென்னையில் சிவகுமாரின் இல்லத்தில் திருமணம் ஆனதில் இருந்து தங்கி வந்தனர். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும், தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டனர். அந்த நகரில் இருக்கும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. கூட்டுக்குடும்பமாக வாழ்ந்த சூர்யா, தனது மனைவி-பிள்ளைகளுடன் மும்பைக்கு குடி பெயர்ந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து அவர் எங்குமே தெரிவிக்கவில்லை. 



மேலும் படிக்க | வாழ்ந்தா சூர்யா கூட தான்! மனம் திறந்த ஜோதிகா...க்யூட் லவ் ஸ்டோரியை இங்க படிங்க..


மும்பையில் இருப்பதால், நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் பட ஷுட்டிங்கிற்காகவும் படத்தின் ப்ரமோஷன் விழாக்களுக்காகவும் மட்டும் சென்னைக்கு வந்து சென்று கொண்டிருக்கின்றனர். அதிலும் 36 வயதினிலே படத்தில் கம்-பேக் கொடுத்ததில் இருந்து வரிசையாக திரைப்படங்களில் நடித்து வந்த ஜோதிகா, இப்போது தமிழ் படங்களில் நடிப்பதே இல்லை. பாலிவுட் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஸ்ரீகாந்த் படத்தில் நடித்திடிருந்தார். இந்த படத்தின் ப்ரமோஷனிற்காக சென்னைக்கு வந்த இவர், விமான நிலையத்திலேயே பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிவிட்டு, அப்படியே விமானத்தில் ஏறி மும்பைக்கு சென்று விட்டார். இதனால், அவர் சென்னைக்கு வருவதையோ, தனது கணவரின் குடும்பத்தினரை பார்ப்பதையோ முழுமையாக தவிர்த்து வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. 


சண்டையா? 


சூர்யாவிற்கு பக்கதுணையாக இருக்கும் அவரது மனைவி ஜோதிகா அவருடன் அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்வதில்லை என்றாலும், முக்கிய விழாக்களில் கண்டிப்பாக கலந்து கொள்வார். ஆனால், கங்குவா விழாவிற்கு சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் வருவார்கள் என்பதால், ஜோதிகா நேற்றைய விழாவில் கலந்து கொள்ளாமல் தவிர்த்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக சிவகுமாரின் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த இவர் மனக்கசப்பு காரணமாக இப்போது அவர்களை பார்ப்பதை தவிர்க்கலாம் என ரசிகர்கள் சிலர் பேசி வருகின்றனர். 


மேலும் படிக்க | கங்குவா இசை வெளியீட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின்-விஜய் குறித்து பேசிய சூர்யா!! என்ன சொன்னார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ