இயக்குநரான சூர்யா-ஜோதிகாவின் 17 வயது மகள்! சினிமாவிற்கு வருவாரா?

Suriya Jyothika Daughter Diya Documentary : தமிழ் திரையுலகின் முக்கிய நடிகர்களான சூர்யா-ஜோதிகாவின் மகள் தியா ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கியிருக்கிறார். இது குறித்த பதிவினை சூர்யாவும் ஜோதிகாவும் வெளியிட்டு இருக்கின்றனர். 

Suriya Jyothika Daughter Diya Documentary : கோலிவுட் திரையுலகில் ஸ்டார் ஜோடியாக இருப்பவர்கள், சூர்யா-ஜோதிகா. திரையுலகிற்குள் வந்த புதிதில் ஐந்திற்கும் மேற்பட்ட  படங்களில் ஒன்று சேர்ந்து நடித்த இவர்கள், 2006ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள்-ஒரு மகன் இருக்கின்றனர். இவர்களின் பெயர், தியா-தேவ். சமீபத்தில் நடிகர் சூர்யா, தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார். இதையடுத்து, சூர்யா-ஜோதிகாவின் பிள்ளைகள் இருவரும் மும்பையில் உள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியில் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இருவரும் தங்களது மகள் தியா விருது வாங்கிய் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் தளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில், தங்கள் மகளை நினைத்து பெருமைப்படுவதாக குறிப்பிட்டிருக்கின்றனர். 

1 /8

நடிகர்கள் சூர்யா ஜோதிகாவின் மூத்த மகள், தியா. 2007ஆம் ஆண்டு பிறந்தார். இவர், தற்போது தனது பெற்றோருடன் மும்பையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. 

2 /8

17 வயதாகும் தியா, தற்போது மும்பையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் பள்ளியில் பயின்று வருவதாக கூறப்படுகிறது. தியாவிற்கு படிப்பில் மட்டுமல்ல, பள்ளியில் நடைபெறும் திறன் விளையாட்டுகளிலும் ஈடுபாடு இருக்கிறதாம். 

3 /8

சில மாதங்களுக்கு முன்பு, சூர்யாவின் மகன் தேவ், தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் பெற்றார். இதே போல தியாவும் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். 

4 /8

எப்போதும், திரை நட்சத்திரங்களின் பிள்ளைகள் சினிமாவிற்கு வருவது பொதுவான விஷயமாகும். விஜய், சூர்யாவில் ஆரம்பித்து, விஜய் சேதுபதியின் மகன் வரை அப்படித்தான் திரையுலகிற்குள் நுழைந்திருக்கின்றனர். இந்த நிலையில், சூர்யாவின் மகள் குறித்த ஒரு செய்தியும் தற்போது வைரலாகி வருகிறது. 

5 /8

தியா, மாணவர்களுக்கான ஒரு டாக்குமெண்ட்ரி படத்தை இயக்கியிருக்கிறார். 

6 /8

இந்த படத்திற்காக அவருக்கு விருதும் கிடைத்திருக்கிறது. 

7 /8

தியாவின் விருது புகைப்படத்தையும், அவரது டாக்குமெண்ட்ரி போஸ்டர் புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கும் சூர்யா-ஜோதிகா, தங்களது மகளை நினைத்து பெருமைப்படுவதாக தெரிவித்திருக்கின்றனர். 

8 /8

இயக்குநராக மாறியிருக்கும் தியா, வருங்காலத்தில் சினிமாவிற்கு வர வாய்ப்பிருப்பதாக சிலர் இணையத்தில் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.