பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக நடிகை வினுஷா தேவி செல்ல மறுத்த காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிக்பாஸ் சிசன் 7:
ஆங்கிலத்தில் பிக்பிரதர் என்ற பெயரில் நடைப்பெற்று வரும் தொலைக்காட்சி நிகழ்ச்சியை, 2007ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் என்ற பெயரில் இந்திய தொலைக்காட்சிகள் நடத்தி வருகின்றன. வட இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்த இந்த நிகழ்ச்சி, 2017ஆம் ஆண்டு தமிழில் தொடங்கப்பட்டது. மெல்ல மெல்ல பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 


தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது (Bigg Boss Tamil 7) சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பலமான போட்டியாளர்கள் பலருடன் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில பல ட்விஸ்டுகள் நடந்தது. புது ரூல்ஸ், பிக்பாஸ் வீட்டிற்குள் ஸ்மால் பாஸ் என்ற பெயரில் இன்னொரு வீடு, புதுப்புது டாஸ்குகள் என பல புது விஷயங்கள் இதில் அறிமுகப்படுத்தப்பட்டன. 


பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில்தான் முதன்முறையாக டபுள் எவிக்ஷன் நடந்தது. முதன் முறையாக நடந்த இந்த எவிக்ஷனில் குறைவாக வாக்கு பெற்ற யுகேந்திரன் மற்றும் வினுஷா தேவி ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இதையடுத்து, கடந்த வாரமும் இரண்டு எவிக்ஷன்கள் நடந்தது. அதில், ஆர்.ஜே.பிராவோ மற்றும் அக்ஷயா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். 


வைல்டு கார்டு எண்ட்ரீ:
இதனிடையே தற்போது கூல் சுரேஷ், விஷ்ணு விஜய், விசித்ரா, விஜே அர்ச்சனா, சரவண விக்ரம், தினேஷ், மணி சந்திரா, ரவீனா, மாயா, பூர்ணிமா, நிக்ஸன் ஆகியோர் உள்ளே உள்ளனர். அதேசமயம் ஏற்கனவே வெளியே தள்ளப்பட்ட அனன்யா ராவ், விஜய் வர்மா (Ananya Rao, Vijay Verma) ஆகிய இருவரும் மீண்டும் உள்ளே நுழைந்துள்ளனர். கடந்த வாரம் வெளியான அறிவிப்பில், மூன்று போட்டியாளர்கள் திரும்பி வரப்போகிறார்கள் என சொல்லப்பட்டது.  அதில் இரண்டு பேர் மட்டுமே வந்த நிலையில் மூன்றவதாக உள்ளே வருவார் என கணிக்கப்பட்ட வினுஷா தேவி பிக் பாஸ் இல்லத்திற்குள் வரவே இல்லை. இதனால் பிக்பாஸ் ரசிகர்கள் குழப்பமடைந்தனர். இதைனிடையே, வெளியேற்றப்பட்டு மீண்டும் இந்த வீட்டிற்குள் வந்திருக்கும் அனன்யா மற்றும் விஜய்யால் பிக் பாஸ் ஆட்டம் செம சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 


மேலும் படிக்க | லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் முதல் படம்... அதிகார்வப்பூர்வ அறிவிப்பு!


வாய்ப்பை ஏற்க மறுத்தாரா வினுஷா:
இந்நிலையில் தற்போது வினுஷா தேவி (Vinusha Devi) வைல்டு கார்டு என்ட்ரிக்கு மறுப்பு தெரிவித்ததற்கு முக்கிய காரம் "பிக்பாஸ் வீட்டில் அவர் எதுவுமே பண்ணவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி சேனல் வெளியிட்ட வீடியோவில் வினுஷா மிக்ஸர் சாப்பிடுகிறார் என கலாய்த்து பதிவு வெளியிட்டனர், பின்னர் அந்த பதிவு நீக்கப்பட்டது. இந்த காரணங்களைத் தவிர நிக்ஸன் உருவக்கேலி செய்ததும் அவர் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணமாக இருந்துள்ளது. இதனால் நொந்துப்போன வினுஷா வைல்டு கார்டு வாய்ப்பை மறுத்தார் என கூறப்படுகிறது. 


லிஸ்டில் யுகேந்திரனும் இருந்துள்ளார்:
இதனிடையே வினுஷாவை அடுத்து யுகேந்திரனும் லிஸ்டில் இருந்துள்ளார், ஆனால் அவர் பிரதீப் ஆதரவாக பேசியிருப்பதால் நிகழ்ச்சி குழுவே அவருக்கு வாய்ப்பு அளிக்க வேண்டாம் என முடிவு செய்தனராம்.


மேலும் படிக்க | ஹரிஷ் கல்யாண் நடித்துள்ள பார்க்கிங் படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ