பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமலஹாசன் விலகுவது உறுதியாகிவிட்டது. தொலைகாட்சியில் கமலுடன் பணியாற்றிய ஒருவரின் டிவிட்டர் செய்தி கமலஹாசனின் பிக்பாஸ் விலகலை உறுதி செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிக்பாஸின் 5 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வந்தார்.


தற்போது பிக்பாஸ் அல்டிமேட், தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தமிழில் 5 சீசன்கள் கடந்த பிக்பாஸ், தற்போது புதிய பரிமாணத்தில் ‘பிக்பாஸ் அல்டிமேட்’ என்ற பெயரில் ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக ஒளிபரப்பாகிறது.


மேலும் படிக்க | நீ ஒன்னும் பிக்பாஸ் இல்ல!


அடுத்த வாரம் முதல் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை கமலுக்கு பதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்க போவதாக சமூகவலைத்தளங்களில் தகவல்கள் பரவி வந்தன. இந்த நிலையில், அந்த செய்தியை உறுதியாக்கும் வகையில் வந்துள்ள செய்தி, பிக்பாஸ் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.



பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இறுதிக்கட்டத்தில்,  கமலுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட போது  நடிகை ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதற்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால், ரம்யா கிருஷ்ணன் தெலுங்கிலும் பிக் பாஸ் சீசனை தொகுத்து வழங்கி இருக்கிறார்.


பலமுறை கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு போக இருப்பதாக வதந்திகள் பரவி இருக்கின்றன, ஆனால் அவை வதந்திகளாகவே இருந்திருக்கின்றன.



ஆனால், தற்போது கமலஹாசனின் விக்ரம் படத்தின் படபிடிப்புக்காக அவர் பிக்பாஸ் அல்டிமேட்டில் இருந்து விலகுகிறார் என்ற செய்தி உறுதியாகி இருக்கிறது.


பல ஆண்டுகளுக்கு முன்னர் கமலஹாசனின் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் பலத்த வரவேற்பை பெற்றது. கமலஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்ட விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தின் படபிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்றுவருகிறது.


 கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' திரைப்படத்தை இயக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். கமல்ஹாசன் தயாரித்து நடித்து வரும் விக்ரம் திரைப்படம் விரைவில் வெளியாக திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


மேலும் படிக்க | Bigg Boss Ultimate: பிக்பாஸ் அல்டிமேட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR